Gold Price [file image ]
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (26-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.54,040க்கும், கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,755க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.88க்கும், கிலோ வெள்ளி ரூ.2000 உயர்ந்து ரூ.88,000க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (25-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.86,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…