2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மழையை கண்காணித்து கூறும் AI- அடிப்படையிலான ‘நவ் காஸ்டிங்’ அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளது. பொதுவாக கோடைக்காலத்தை விட மழைக்காலங்களில்,காய்ச்சல், ஜலதோஷம்,சளி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உண்டு.அவ்வாறு இருக்க சில நேரங்களில் வானிலை முன்னறிவிப்புகள் கூட மழைக்கான வாய்ப்புகளைக் கணிப்பதில் சிறிது பின்தங்கி விடுகிறது.இதனால்,மழைக்கலங்களில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கனமழைகளில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில்,கூகுளுக்குச் சொந்தமான லண்டன் ஆய்வகமான டீப் மைண்டின் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு […]
கூகுள் குரோம் ஜீரோ டே ஹேக்:கூகுள்,தனது குரோம் வலைப்பதிவில்,பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளது. கூகுள் குரோம் பயனர்களுக்கு சில மோசமான செய்திகள் கிடைத்துள்ளன. அதாவது,கூகுளில் ஒரு முக்கியமான ஹேக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2 பில்லியனுக்கும் அதிகமான கூகுள் குரோம் பயனர்கள்,தங்கள் கூகுள் குரோமை புதுப்பிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் கிட்டத்தட்ட அனைத்து கூகுள் குரோம் பயனர்களையும் ஹேக் செய்யும் அபாயத்தில் உள்ளது.கூகுள் குரோமில் புதிய பூஜ்ஜிய-நாள் சுரண்டல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கூகுள் ஒரு வலைப்பதிவு இடுகையில் ஹேக் செய்ததை […]
ட்ரினிக் (Drinik)என்ற புதிய ஆண்ட்ராய்டு மால்வேர் பயனர்களின் மொபைல் வங்கி தரவு,பணத்தை திருடுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் பயனர்களைக் குறிவைத்து வங்கி தகவல்கள் மற்றும் பயனர் தகவல்களை திருட சைபர் குற்றவாளிகளால் ஒரு புதிய ஆண்ட்ராய்டு தீம்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கணினி அவசர மறுமொழி குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,இக்குழு தீம்பொருள் செயல்படும் விதம் குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது.அதன்படி, புதிய மொபைல் […]
வாட்ஸ்-அப் பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள பேடிஎம்,ஜி-பே,போன்-பே(paytm,Gpay,phonepe) போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,வாட்ஸ்-அப் நிறுவனமும் இந்திய பயனர்களுக்காக அதன் வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது இந்நிலையில்,பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தைகைய புதிய வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சம் இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய பங்கு […]
பேஸ்புக் நிறுவனம் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கரங்களிலும், மொபைல் போனை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளம் தான். பேஸ்புக், வாட்சப், இண்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் ஒரு கணக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், சமூகவலைத்தள பக்கங்களில் பல போலி கணக்குகளும் உருவாகிறது. இதனால் பல பிரச்சனைகள் […]
போலி விமர்சனம் காரணமாக 600 சீன பிராண்டுகளை அமேசான் நிறுவனம் தடை செய்துள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்துள்ளது.அதே நேரத்தில் இந்த பிராண்டை விற்கும் 3000 விற்பனையாளர்களின் கணக்குகளும் அகற்றப்பட்டது.அமேசான் நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,அமேசான் நிறுவனம் கூறுகையில்: “வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க வேண்டும் என்பதற்காக கடினமாக அமேசான் உழைக்கிறது. எங்கள் தளத்தில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் […]
பேஸ்புக் இந்தியா தனது புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ராஜினாமா செய்த அங்கி தாஸுக்கு பதிலாக,தனது புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும்,முன்னாள் ஊபர்( Uber) நிர்வாகியுமான ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளதாக பேஸ்புக் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. அதன்படி,அகர்வால்,இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனாளிகளின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, உள்ளடக்கம் மற்றும் இணைய நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான கொள்கை மேம்பாட்டு […]
கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய வாய்ப்பு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 க்கும் மேற்பட்ட ஆப்கள்(apps) ஆபத்தானது என்று டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் இருப்பிடம்,கடவுச்சொல் (password) உள்ளிட்ட தனிப்பட்ட தரவு கசிவு மற்றும் உங்கள் ஃபோனின் பாதுகாப்பை பாதிக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் படி,19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு […]
இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று முடக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது. இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர் கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் […]
பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. பல நாடுகளில் மிகவும் பிரபலமாகவுள்ள கிரிப்டோகரன்சி (Crypto Currency),சமீபத்தில் இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது.காரணம்,பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் ஏராளமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். இந்நிலையில்,கூகுள் (Google) தனது பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை நீக்கியுள்ளது.ஏனெனில், கிரிப்டோகரன்சி செயலி என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடிய தீம்பொருள்களை நிறுவி உங்கள் பணத்தைச் சுரண்டக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே,இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக […]
வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சம் 90 நாட்களுக்கு நீட்டிக்க சோதனை நடைபெற்று வருகிறது. பிரபல சமூக ஊடகமான வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,வாட்ஸ்அப் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது,அது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை தானாகவே நீக்குகிறது. இந்நிலையில்,வாட்ஸ்அப்பில் காணாமல் […]
தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்,தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி,தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் ஆபத்தான நிறுவனக் கொள்கைகளின் கீழ் […]
வாட்ஸ்-அப் நிறுவனம் அதன் செயலியில் ‘வியூ ஒன்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்-அப் நிறுவனம் இறுதியாக ‘வியூ ஒன்ஸ்’ (View Once) புகைப்பட அம்சத்தை பயன்பாட்டின் நிலையான பதிப்பில் சேர்த்துள்ளது.இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்நாப்சாட் போன்றவைகளில் உள்ள மீடியா (expiring media )அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் போன்றது. அதாவது,இந்த ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஒருமுறை பார்க்கப்பட்ட பின்னர் தானாக மறைந்துவிடும். ஆனால், ஒவ்வொரு முறையும் நீங்கள் […]
பழைய ஆண்ட்ராய்டு மொபைல்போன் வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 27 க்குப் பிறகு கூகுள் பயன்பாடுகளில் உள்நுழைய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் இன்னும் ஒரு பழைய ஆண்ட்ராய்டு மொபைல் போன் 2.3.7 கிங்கர்பிரெட் வெர்ஷனை பயன்படுத்துகிறீர்களா?,அவ்வாறு,நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இனி உங்கள் மொபைல் போனில் கூகுள் பயன்பாடுகள் இயங்காது. அதாவது,ஆண்ட்ராய்டு மொபைல்போன் 2.3.7 கிங்கர்பிரெட் அல்லது பழைய ஆண்ட்ராய்டு போன்களில் ஜி-மெயில்(Gmail), யூ-டியூப் மற்றும் கூகுள் மேப் போன்ற கூகுள் பயன்பாடுகளை செப்டம்பர் 27 முதல் […]
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.ஏனெனில், இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மேலும்,பயனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாக விளம்பரப்படுத்தியும் வருகின்றனர். இதற்கிடையில்,இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு,வருத்தத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் […]
அடுத்த 5 ஆண்டுகளில் பேஸ்புக் ஒரு மெட்டாவர்ஸ் நிறுவனமாக மாறும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக் “மெட்டாவர்ஸ்” என்ற டிஜிட்டல் உலகில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை உருவாக்குகிறது, அங்கு மக்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் செல்லவும் மெய்நிகர்(Virtual) சூழலில் தொடர்பு கொள்ளவும் முடியும் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திங்களன்று தெரிவித்தார். இதனையடுத்து,இந்த அணி பேஸ்புக் நிறுவனத்தின் மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும் […]
வாட்ஸ்அப் நிறுவனம் குரூப் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ்அப் செயலியானது இன்றியமையாத தேவையாகி விட்டது. அதை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,இனி பயனர்கள் ஒரே நேரத்தில் பலருடன் கான்பிரன்ஸ் கால் பேச முடியும்.குறைந்த பட்சம் 5 பேர் வரை ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் வீடியோ அல்லது ஆடியோ கால் மூலம் பேசமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின்(AIMIM) இன் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எலோன் மஸ்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமினின் (AIMIM) கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டது. அதன்பின்னர்,ஹேக்கர் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பயோவில் அதன் பெயரை AIMIM இலிருந்து ‘எலோன் மஸ்க்’ என்று மாற்றியுள்ளார். மேலும்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கின் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ள சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் […]
ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோ-பிளாக்கிங் தளமான டுவிட்டர் நிறுவனம்,கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஃப்ளீட்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸைப் போன்று 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.மக்களை ட்வீட் செய்ய தூண்டும் முயற்சிக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,பயனர்களின் குறைந்த பயன்பாடு காரணமாக ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.இதனால்,ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் முற்றிலுமாக நீக்கப்படும்.முன்னதாக,எட்டு மாதங்களுக்குப் பிறகு,புதிய நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு […]
டெல்லியில் உள்ள பயணிகள் இன்று முதல், கூகுள் மேப்ஸில் தற்போதைய நிலவரப்படி உள்ள பேருந்து வருகை குறித்த தகவல்களைப் பெற முடியும். கூகுள் மேப்ஸ் (Google Map) என்பது உலகில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வழி கண்டுபிடிக்க உதவும் தளங்களில் ஒன்றாகும்.ஒரு பெரிய நகர நகரமாக இருந்தாலும் அல்லது சிறிய கிராமமாக இருந்தாலும், உலகெங்கிலும் உள்ள இடங்களில் பல்வேறு இடங்களுக்கு இடையில் பயணிக்க பயனர்களுக்கு உதவ கூகுள் மேப்ஸ் பயன்பாடு பயனுள்ளதாக இருக்கும். […]