சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,27-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.89.62-க்கு விற்பனை. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.109.27 மற்றும் டீசல் […]
குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து. சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக்கோரி அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோயில் நிலத்தில் குயின்ஸ்லேண்ட் பூங்கா இருப்பதாக கூறி, இதனை காலி செய்யுமாறு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதுதொடர்பாக குயின்ஸ்லேண்ட் நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அறநிலையத்துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூங்கா அமைத்துள்ள இடம் தொடர்பான நில விவகாரம் விசாரணை, நில […]
விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என கூடுதல் ஆணையர் தகவல். திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் அப்பு எனப்படும் எஸ்.ராஜசேகர் (33) என்பவர் திருட்டு வழக்கு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ராஜசேகர் பிரபல ரவுடி என்றும், இவர் மீது திருட்டு, கொலை, கொள்ளை தொடர்பாக 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டது. ராஜசேகரை விசாரணைக்காக அழைத்து […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,25-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல், டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல,டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ .96.72 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ .89.62-க்கு விற்பனை. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. […]
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.ஜூன் 23-ல் அதிமுகவின் செயற்குழு,பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து,வரும் 23-ஆம் தேதி நடக்கும் கூட்டத்திற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை […]
பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை தரம்பிரித்து வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று நோட்டிஸ். அந்த நோட்டீஸில், சென்னை மாநகரை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை (Wet Waste/Biodegradable Waste and Dry Waste Non-Biodegradable Waste) என வகைப் பிரித்து அவற்றை தினசரி வீடு தோறும் வரும் மாநகராட்சி தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தீங்கு விளைவிக்ககூடிய […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 குறைவு. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,760 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 சரிந்து, ரூ.4,740 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, சில்லறை வர்த்தகத்தில் ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தின் உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.760 குறைந்திருப்பது […]
அதிமுக பொதுக்குழு மற்றும் கூட்டம் வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்,தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது என்று அதிமுக தலைமை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,பொதுக்குழு கூட்டம் தொடர்பான அதிமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர் […]
கல்விக்கும், மருத்துவத்துக்கும் அக்கறை செலுத்தி வருகிறோம் என நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பேச்சு. சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், கொளத்தூரில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மறுசீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். ஜமாலியாவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார். […]
கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் கைது. அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி சொத்துக்களை அபகரித்த புகாரில் பல மாதங்களாக தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த, சரவணன் தற்போது கைது செய்யப்பட்டார். கடந்த 2019ல் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துகளை அபகரித்த புகாரில், முன்னாள் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த […]
இன்று முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்று சென்னைவாசி மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலங்களில் இன்று (ஜூன் 11-ஆம் தேதி) முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய […]
கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு குழந்தைகள் முதல் முதியோர் வரை பலர் அடிமையாகியுள்ளனர். இதனால் தங்களது பணத்தை இழப்பது மட்டுமல்லாமல், தங்களது குடும்பத்தையும் சிலர் இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த வகையில், சென்னை நந்தபாக்கத்தில் கணவன் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த காரணத்தால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மகனின் பள்ளி கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை கணவர் எடுத்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதால், மனமுடைந்த மனைவி […]
சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையில் காவல்துறைக்கு, புதிய ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை காவல்துறைக்கு கூடுதல் ரோந்து வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் ரூ.14.71 கோடி மதிப்பிலான 93 ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர். சென்னையில் போக்குவரத்தை சீர்செய்திட காவல் ரோந்து வாகனங்கள் […]
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,ஈரோடு,தருமபுரி,சேலம், கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,வேலூர்,ராணிப்பேட்டை ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக […]
பிற மாநிலம் உள்பட பல்வேறு இடங்களில் போலி ஷிப்பிங் நிறுவன மோசடி பெரிய அளவில் நடந்துள்ளது என சென்னை காவல் ஆணையர் குற்றசாட்டு. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி செய்த 3 பேர் மீது குண்டாஸ் சட்டம் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறுவோரிடம் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு. சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 9 பேரில் 8 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இந்த 8 பேரையும் நிரந்திர நீதிபதிகளாக தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக ஜி.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், கே.முரளிசங்கர், டிவி.தமிழ்செல்வி, ஆர்.என். மஞ்சுளா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். மேலும், கூடுதல் நீதிபதியான எஸ்.சதீஸ்குமார் மட்டும் வேறு […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகை விரும்பிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வேதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்தவகையில் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதன் காரணமாக சில நாட்களாக தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், தங்கத்தின் […]
சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில், இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்று கூறப்படுகிறது. சென்னையில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடைபெறும் நிலையில்,கண்காட்சி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.கண்காட்சியில் […]