கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி – திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் பலர் கேரளாவிற்கு நிதி அளித்து வருகின்றனர். DINASUVADU
சினிமாவில் நடித்து பிரபலமானவர்களை விட தற்போது நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிப்பவர்கள் அதிகமாகிவிட்டனர். அந்த வகையில் விஜய் டிவி யில் தினமும் ஒளிபரப்பாகும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக இருக்கும் சஞ்சீவ் மற்றும் மானசா. தனியார் நிகழ்ச்சிகளுக்கு கூட இவர்களை ஜோடியாகத்தான் அழைக்கிறார்களாமTea விருது விழாவில் இவர்களுக்கு விருது கிடைத்துள்ளது. இதனை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த விஷயம் அரிந்த ரசிகர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். https://www.instagram.com/p/BmY0ZOWn-z_/?utm_source=ig_web_copy_link
நடிகை கீர்த்தி சுரேஷ் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கான படப்பிடிப்பு காட்சிகள் அனைத்தும் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் உள்ள தொழிலாளர்களில் 150 பேருக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
விஜய் டிவியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா. இவர் சின்னத்திரை நிகழிச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர். கடந்த சில நாட்களாக இவரது செயல்பாடுகள் எதுவும் சொல்லும் விதமாக இல்லை.சமீபத்தில் இவர் தனது உடல் எடையை குறைத்தார்.அதிலிருந்து அவரது சமூக வலைதளபக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார். இதனால் அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.பொதுவாகவே தொகுப்பாளினிகள் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விடுவார்கள்.அதே போல் இவரும் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னனி கதநாயகியாக வலம் வரும் நயந்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கோலமாவு கோகிலா இதில் கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா மற்றும் யோகி பாபு. தற்போது இவரை கொண்டு இப்படத்தில் வெளிவந்த கல்யாண வயசு வந்துருச்சுடுடி..என்ற பாடல் இளையர்களிடம் நல்ல வரவேற்வை பெற்றது. இதற்கு அனிரூத் இசையமைத்தார்.இப்படம் ஆக.17 தேதி வெளியாகிறது இதனால் நயந்தாராவின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டம் துவங்கியுள்ளது. DINASUVADU
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படம் மாதம் 24 தேதி வெளியாக உள்ளது.இதில் நடிகர் சத்யராஜ்,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார்.ஆக.24 அன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் செந்தில் கணேஷ்.சினிமாவிலும் பாடத்தொடங்கிய செந்தில்கணேஷ். தற்போது மறைந்த கலைஞருக்காக அஞ்சலி செலுத்தும்விதமாக தன்னுடைய கம்பீரமான குரலால் தளுதளுக்க பாடியுள்ளார். DINASUVADU
சமீபகாலமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தி வருபவர் ஸ்ரீரெட்டி.ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்க வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்று எதுவும் சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததாக வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்” என ஆண்ட்ரியா கூறியுள்ளார். DINASUVADU
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் என அறிவிப்பு வெளிவந்தது.தற்போது வந்துள்ள தகவல் படி சிம்பு இந்த படத்தில் நெகடிவ் வேடத்தில் தான் நடிக்கிறாராம். மங்காத்தா அஜித் போல இந்த படத்தில் சிம்பு முற்றிலும் கெட்டவனாக தான் வருவாராம். முற்றிலும் அரசியல் களத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. DINASUVADU
பிக்பாஸ் 2 வின் இன்றைய ப்ரோமோ வெளியானது இதில் வைஷ்னவி மற்றும் டேனியல் ஆகிய இருவருக்குமிடையே நாமினேஷன் போர் முற்றுகிறது. வைஷ்னவி டேனியலை எப்பொழுதும் இவர் பேச்சு என்னை நோகடிக்கும்விதமாக உள்ளது என்று கூறுகிறார் .டேனியல் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழை ஆயுதமாக எடுக்கின்றார் தான் கமல் சார் உடன் தமிழில் குரல் உயர்த்தி பேசி வெற்றி பெறுவதாக வைஷ்னவி குறை கூறுகிறார். இது எனது மொழியை இழிவுபடுத்துபவது போலுள்ளது தமிழை குறை கூறுவது என்னை […]
பிக்பாஸ் 2 விஜய் டிவியில் நடந்து வருகிறது இதில் பிக்பாஸ் 1 யை விட பல சர்ச்சைகள் நடந்து வருகிறது அதன் பார்வையாளர்களை அதிகப்படுத்துவதற்க்காக டைரக்டர் சொல்லிவைத்தது போல பல நிகழ்வுகள் நிகழ்ந்து வருகிறது . இதில் சர்வாதிகாரமா vs மக்கள் அதிகாரமா என்று தலைப்பில் ஒரு சிறுபிள்ளை விளையாட்டு விளையாண்டனர் ஐஸ்வர்யா ராணியாக இருக்க அவர் மற்றவர்களை ஆட்டிப்படைத்தார் இதில் கோபமடைந்த பொன்னம்பலம் ஐஸ்வர்யாவின் கழுத்தை நெரித்து நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டார் . இதனால் அழுது […]
கடந்த 27 ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது . பின் கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.ஆகஸ்ட் 8 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி […]
கிகி சேலஞ்ச் உலகம் முழுவதும் நோய் போல தொற்றி கொண்டு வரும் ஒருவகை கேம். அதாவது ஓடும் காரிலிருந்து இறங்கி காரில் பாடும் பாட்டிற்கு நகரும் காருடனே நடனமாட வேண்டும். அதுதான் இதோட சேலஞ்ச். விபத்துகள் எளிதாக ஏற்பட கூடும் இந்த கேமிற்கு போலீஸாரிடம் இருந்து பலத்த கண்டங்கள் வந்துள்ளன. சமீபத்தில் மும்பை ரயில்நிலையத்தில் கிகி சேலஞ் செய்த மாணவர்களை போலீசார் தேடிப்பிடித்து அவர்களுக்கு ரயில்நிலையத்தை இரண்டு நாட்களுக்கு சுத்தம் செய்ய தண்டனை வாங்கிக்கொடுத்தனர். ஆனாலும் இந்த […]
ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50-ஆவது படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு காரணமாக அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஹன்சிகா நடிக்கும் 50-ஆவது படத்தின் பெயரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் படக்குழுவினருக்கு தனுஷ் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். மஹா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார்.செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்குகிறது. DINASUVADU […]
வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் பலியாகி இருப்பதாகவும், 6 பேர் காணாமல் போயிருப்பதாகவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் 53 ஆயிரத்து 500 பேர் வீடுகளை இழந்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் நாசர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் […]
நடிகையர் திலகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நேற்றோடு நிறைவு பெற்றது. எப்போதும் படப்பிடிப்பு நிறைவடைந்தால் எல்லோரும் கேக் வெட்டி, செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து கொண்டாடுவது வழக்கம்.ஆனால் கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் (150) பேர் எல்லோருக்கும் 1 கிராம் கோல்ட் காயின் வழங்கியுள்ளார். தன்னுடைய படக்குழுவை மிகவும் நேசித்து கீர்த்தி வழங்கிய பரிசு படக்குழுவினர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. […]
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ள இப்படத்தில், அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண் விஜய், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப் படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீசாக […]
கேரளாவில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டுள்ள போதிலும், மழை, நிலச்சரிவு காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். 54 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதைதொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கேரளா மாநிலத்தில் மழையினால் பாதிக்கப்பபட்டுள்ள திருவனந்தபுரம் பகுதியில் மக்களுக்கு இலவசமாக அரிசி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது. மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான இடுக்கி ,வயநாடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் […]
இந்திய அணியின் கேப்டனும் கிரிக்கெட் வீரருமான விரட் கோலியாக நடிக்க நடிகர் மம்முட்டியின் மகன் துல்கார் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிரிக்கெட் வீரர் தோணியின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த கன்வர் என்ற இந்தி படத்தில் இர்பான் கான் ,மிதிலா பால்கருடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் துல்கர் சல்மான் தமிழில் வாயை மூடி பேசவும் மற்றும் நடிகையர் திலகம், […]
இணைய தளங்களில் ‘சர்கார்’ ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோ லீக்கானது. விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி […]