கல்கி 2898 AD : இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கின்ற திரைப்படம் தான் ‘கல்கி 2898 AD’. நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துர்கூர் சாலிமான், கமல்ஹாசன், திஷா பதானி, ராணா டக்குபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் […]
ஜெயம் ரவி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் எதிர்கொள்ளும் வதந்திகள் மிகப்பெரிய ஒன்று விவாகரத்து வதந்தி என்றே கூறலாம். விவாகரத்து வதந்தி வெளியான பிறகு சற்று அதிர்ச்சியாகி அவர்கள் இதற்கு விளக்கமும் கொடுப்பது உண்டு. அப்படி தான், தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தி ரவியும் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. இப்படியான ஒரு தகவல் பரவுவதற்கு முக்கிய காரணமே […]
அனுஷ்கா : ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட ரசிகர்கள் அப்படியே இருப்பார்கள். அந்த வகையில், அதில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த சில வருடங்களாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் […]
ஜான்வி கபூர் : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்துகொண்டு இருப்பவர் ஜான்வி கபூர். இவர் நடிகை ஸ்ரீ தேவி – தயாரிப்பாளர் போனிகபூர் இருவருடைய மகள் என்பது பலருக்கும் தெரியும். 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ஜான்வி கபூர் 6 வருடங்களில் 11 படங்களில் நடித்துள்ளார். ஜான்வியின் அடுத்த பெரிய பட்ஜெட் படமான தேவாராவில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக நடிக்கிறார். ஒரு பக்கம் தொடர்ச்சியாக படங்களில் பிசியாக […]
சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்த படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட் விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் விலை உயர்ந்த பொருட்களை அணிவது சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் அணிந்து இருக்கும், பொருட்கள் விலை பற்றிய தகவல் வெளியாகும் போது அடேங்கப்பா விலை இவ்வளவா? என நாம் ஆச்சரியபடுவது உண்டு. அப்படி தான் தற்போது […]
கஜால் அகர்வால் : நடிகை கஜால் அகர்வாலின் சொத்துமதிப்பு குறித்த விவரம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவை சேர்ந்த பிரபலங்களுடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் அடிக்கடி வெளியாவது உண்டு. அப்படி தான் தற்போது நடிகை காஜல் அகர்வாலின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாமட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வால் ஒரு படத்திற்கு 1.5 கோடியில் இருந்து 4 […]
ஃபஹத் ஃபாசில் : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கடைசி கால் மணி நேர வில்லத்தனத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஃபஹத் ஃபாசில் என்று சொல்லலாம். முதல் பாகத்தை போல, ஃபஹத் ஃபாசில் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் […]
புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2 ‘ படமும் ஒன்று. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி […]
யோகி பாபு : தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. காமெடி நடிகர்களாக கலக்கி கொண்டு இருந்த சந்தானம், சூரி, ஆகியோர் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதால் யோகி பாபுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது யோகி பாபு, கோட், இந்தியன் 2, காதலிக்க நேரமில்லை, உள்ளிட்ட பல பெரிய படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக இதனை தவிரவும் பல படங்களில் நடிக்கவும் […]
பிக் பாஸ் சீசன் 8 : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாம் சுவாரசியமாக இருக்கும் காரணத்தால் இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்ப்பது உண்டு. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 7 சீசன் முடிந்து இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற 7 -வது சீசன் நிகழ்ச்சியில் விஜே அர்ச்சனா டைட்டிலை தட்டிச்சென்றார். இந்நிலையில், […]
இந்தியன் 2 : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் 2’ . இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, மார்க் பென்னிங்டன், ஆராஷ் ஷா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் ஜூலை […]
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றியடைந்தது என்றால் அவர்கள் தங்களுடைய அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கேட்கும் தகவலை பார்த்து இருப்போம். அப்படி தான் நடிகர் அருண் விஜய்யும் தனது சம்பளத்தினை வணங்கான் படத்தினை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் உயர்த்தி கேட்டு வருகிறாராம். அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் வணங்கான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு […]
புஷ்பா 2 : அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் ஓடிடி விற்பனை விலை மற்றும் சேட்டிலைட் விற்பனை விலை குறித்த தகவல் இந்திய சினிமாவையே அதிர வைத்து இருக்கிறது. இந்திய சினிமாவே காத்து இருக்கும் திரைப்படங்களில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் “புஷ்பா 2” படமும் ஒன்று. இந்த படத்தினை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகிறார். படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 400 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரிக்கிறது. படத்திற்கு […]
ராயன் : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தான் காரணம் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷின் 50-வது படமான ராயன் வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த படத்தில் சில காட்சிகள் தனுஷ் நினைத்தபடி சரியாக வரவில்லை என்றும், அந்த காட்சிகளை மட்டும் மீண்டும் ரீ […]
சுந்தர் சி : அரண்மனை 4 படம் பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில், அடுத்ததாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான அரண்மனை 4 படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாடி மிக்பெரிய ஹிட் பட்டியலில் இணைந்துள்ளது. 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து […]
தளபதி 69 : விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 69’ படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த நிலையில், அக்டோபர் மாதத்திற்கு தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் விஜய்க்கு 68-வது திரைப்படம் இந்த படத்திற்கு பிறகு விஜய் தனது 69-வது படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபட இருக்கிறார். விஜயின் 69-வது திரைப்படத்தினை […]
எம்எஸ் சுப்புலட்சுமி : பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க வைக்க த்ரிஷா, நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்களின் வாழ்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பழம் பெரும் பாடகியான எம்எஸ் சுப்புலட்சுமியின் வாழ்கை வரலாற்று படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவருடைய வாழ்கை வரலாற்று படத்தை பிரமாண்டமாக எடுக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாராக இருக்கிறதாம். படத்தினை கன்னட படங்களை […]
அமரன் : சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 21-வது படமான “அமரன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்குகிறார். படத்தினை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை […]
வணங்கான் : கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கும் நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வணங்கான்’. இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ், மமிதா பைஜு, மிஷ்கின், மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தில் இருந்து […]