அடேங்கப்பா! தீபிகா படுகோண் அணிந்திருக்கும் இந்த பிரேஸ்லெட் விலை எவ்வளவு தெரியுமா?

தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட் விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் விலை உயர்ந்த பொருட்களை அணிவது சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் அணிந்து இருக்கும், பொருட்கள் விலை பற்றிய தகவல் வெளியாகும் போது அடேங்கப்பா விலை இவ்வளவா? என நாம் ஆச்சரியபடுவது உண்டு. அப்படி தான் தற்போது நடிகை தீபிகா படுகோண் அணிந்திருக்கும் பிரேஸ்லெட் விலை நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த படம் வரும் ஜூன் 27-ஆம் தேதி திரையரங்குககளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மும்பையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரபாஸ், தீபிகா படுகோண், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.
அந்த விழாவிற்கு வருகை தந்தை தீபிகா படுகோண் கருப்பு நிற உடையில் சிம்பிளாக கையில் பிரேஸ்லெட் ஒன்றை அணிந்து வந்து இருந்தார். கர்ப்பமாக இருந்த காரணத்தால் அவர் கவர்ச்சியாக இல்லாமல் சிம்பிளாக வந்ததாக தெரிகிறது. இருப்பினும், அவர் கையில் அணிந்து வந்த பிரேஸ்லெட் விலை தான் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது . அவர் அணிந்து வந்த அந்த பிரேஸ்லெட் விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் எம்மாடி 1 கோடிக்கு மேலயா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025