கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் – பலி எண்ணிக்கை 42ஆக உயர்வு.!

கள்ளக்குறிச்சி : கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரத்தில் விஷசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணமே உள்ளது.
அதன்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழப்பு விழுப்புரம்அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் என இதுவரையில் 42 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 பேரில் மூவர் உயிரிழந்த நிலையில், மீதம் உள்ள 16 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், கவலைக்கிடமாக உள்ளோரில் 10 பேருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மருத்துவமனையில் 24 பேர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது. இதனிடையே, கருணாபுரத்தைச் சேர்ந்த 21 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. .
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025