டிசம்பர் 26 – (1981) இன்று தமிழ் திரைப்படவுலகில் புகழ்க் கோடி நாட்டிப் பறந்துகொண்டிருந்த நடிகை சாவித்திரி இறந்த நாள். பணமும் புகழும் வசதியுமாக வாழ்ந்த சாவித்திரி இப்படி எலும்புகள் துருத்திக் கொண்டிருக்க நோய்கூடாக மாறிப்போனது தான் சினிமாவின் நிஜம். சினிமாவை தவிர வேறு எந்த துறையிலும் வீழ்ச்சி இவ்வளவு பெரிய புறக்கணிப்பையும் மீளமுடியாத சோகம் சூழ்ந்த தனிமையும் தருவதில்லை. சாவித்திரியின் இறுதிக் கட்ட புகைப்படம் வெளியே கவர்ச்சியாக தொன்றும் திரைப்பட உலகின் மற்றொரு அதிர்ச்சியூட்டும் கதை […]
வரலாற்றில் இன்று – 2004 டிசம்பர் 26 உலகமே அதிர்ச்சியில் உறைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின. சுனாமி என அழைக்கப்படும் இந்த பேரலைகளின் தாக்குதலில் உலகம் முழுவதும் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 […]
சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர், சிறந்த ராஜதந்திரி மா சே துங் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 26, 1893). இவருக்கு 18 வயது இருக்கும்போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. அங்கு நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. 1920-ல் கொள்கைப் பற்றுமிக்க பொதுவுடைமையாளர் ஆனார். விரைவில் பொதுவுடைமைக் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது. […]
புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று அழைக்கப்படும் எம்.ஜி.ஆர் மறைந்த தினம் இன்று. 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையில் உள்ள நாவலப்பிட்டியில் பிறந்தார். மக்கள் அனைவராலும் நேசத்தோடு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்பட்ட இவரின் இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். தன்னுடைய சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியதோடு, தன்னுடைய அயரா உழைப்பு காரணமாக திரைத்துறையில் கால்பதித்தார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிதோடு, […]
‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’, ‘தந்தை பெரியார்’, தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் ஈ.வெ ராமசாமி மறைந்த தினம் இன்று. 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்கு விடை தேடத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் கொள்கை மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். […]
வரலாற்றில் இன்று – டிசம்பர் 23, 1921 – புகழ்பெற்ற விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் மேற்கு வங்கத்தில் சாந்திநிகேதனில் கவி ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக் கழக மரபுப்படி இந்திய பிரதமரே இதன் துணை வேந்தராக இருப்பார். நோபல் பரிசு பெற்ற போருளாதார நிபுணர் அமர்த்யா சென், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, புகழ்பெற்ற வங்காள திரைப்பட இயக்குனர் – பாரத் ரத்னா – சத்யஜித் ரே முதலானோர் இப்பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் என்பது […]
இன்று டிசம்பர் 23 – இந்திய உழவர் தினம். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்தவர் சவுத்திரி சரண்சிங். அவரது பிறந்த நாளே தேசிய உழவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உழவர் பிரச்சினைகள் குறித்து இந்திய மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.. இந்திய விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தேசிய மாதிரி சர்வேயில், 8 சதவிகித மக்கள் விவசாயத்தை விட்டு வெளியேறிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கை, […]
வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1898 – ரேடியம் (Radium) கண்டுபிடிக்கப்பட்டது ரேடியம் என்பது ஒளிரும் கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும். போலந்து நாட்டை சேர்ந்த பிரஞ்சு பெண்ணான மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் கியூரி [Marie & Pierre Curie] இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்டி தாதுவைத் தொடர்ந்து சோதித்தார்கள். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு உக்கிரம் கொண்ட கதிர்களை வெளியாக்கும் ரேடியம் [Radium] என்னும் […]
வரலாற்றில் இன்று டிசம்பர் 21, 1768 – இந்தியாவின் வடக்கே இமயமலைப் பிரதேசத்தில் நேபாளம் என்ற புதிய நாடு உருவானது. பிருத்வி நாராயண் ஷா எனப்படும் கூர்க்கா வமிச அரசர் நேப்பாள நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றார். இந்த நேப்பாள நாடு சமீப காலம் வரை ஒரு இந்து நாடாக இருந்துவந்தது. பாரதீய ஜனதா கட்சியின் எஜமானர்களாகவுள்ள பஜ்ரங் தள் போன்ற இந்துத்வா பரிவாரங்கள் நேபாளம் உள்ளிட்ட அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று வாய்க் கொழுப்புடன் வீர வசனம் […]
இன்று டிசம்பர் 21ம் நாள் “Winter Solstice ” என்று சொல்லப்படும் குளிர்கால சங்கராந்தி அல்லது மகராயனம் நிகழும் நாள் ஆகும். பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது என அறிவோம். அப்படி வரும்போது சூரியன் பூமத்திய ரேகையை விட்டு வெகு தொலைவை அதாவது கடைக் கோடியை அடையும் நாள் இதுவாகும். இன்றையதினம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள அனைத்து பகுதிக்கும் நீண்ட இரவும் மிகக் குறுகிய பகலும் நிலவும். வடதுருவத்தில் முற்றிலும் இரவு […]
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப் போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி […]
உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 18)தான் பிறந்தார். லெனின் மறைவுக்குப் பின், 1922 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக செயல்பட்டார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை தோற்றுவித்து, உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக ரஷ்யாவை மாற்றினார். போரின் காரணமாக உலகம் […]
உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் பிரதான இடம் பெறுகின்றன. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை மழையின் மூலமாக வழங்குவதுடன், பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் வாழ்விடங்களாகவும் விளங்குவதுடன், பல பழங்குடி மக்களின் வாழிடமாகவும் விளங்குகின்றன. காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், மரங்களை வெட்டுதல் போன்ற காரணங்களினால் மலைகள் அழிவினை எதிர்நோக்குகின்றன. இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 11ம் நாள் உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்ததினம். சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். […]
வரலாற்றில் இன்று நவம்பர் 26 – 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற மிகவும் பயங்கரமான லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர். இவர்கள் இந்தியாவின் நுழைவு வாயிலான மும்பையின் மிகவும் பிரபலமான தாஜ் ஓட்டல், சத்ரபதி சிவாஜி முனையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் 166 பேரை கொன்று குவித்தனர். குறைந்தது 308 பேர் […]
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் மூன்றாவது வியாழக்கிழமை உலக தத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை மற்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு குறை முடியும் என்று யுனஸ்கோ கூறுகிறது. நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் முழம் வழங்க முடியும் என்று யுனஸ்கோ கருதுகிறது
இன்று யுனெஸ்கோ ( UNESCO ) நிறுவனம் உருவாக்கப் பட்ட நாள் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று ஆகும். 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை அளித்தும் ஊக்குவித்தும் வருகிறது இந்த அமைப்பு. மேற்படி துறைகள், […]
இன்றைய நவீன உலகத்தில் மக்களிடையே உள்ள சகிப்புத்தன்மை குறைந்துவருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சகிப்புத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும்தான் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘உலகில் நிலவும் அனைத்து மக்களும் பல்வேறு மதங்களையும் கலாச்சாரங்களையும் பாராட்டி, அவற்றை சமமாகக் கருதி ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம். இது வெறும் நன்னெறி கோட்பாடு மட்டும் அல்ல, மாறாக, உலக நாடுகள் அவரவர் நாட்டின் சட்ட திட்டங்களாக, அரசியல் கோட்பாடுகளாக நிலை நிறுத்த வேண்டும்’ என்று யுனெஸ்கோவின் […]