வரலாற்றில் இன்று ஜனவரி 10 , 1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டு தாயகமான வங்காளதேசம் திரும்பினார் . மேற்கு பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கிளர்ச்சி செய்தனர். மாபெரும் புரட்சி வெடித்தது. ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஷேக் முஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டு மேற்கு பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறைவைக்கப்பட்டார்.. கிழக்குப் பாகிஸ்தானின் ஏராளமானவர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். மேற்கு பாகிஸ்தானின் ராணுவ […]
இன்று பழம் பெரும் நடிகரும் நாடகக் கலைஞரும் ஆன ஆர். எஸ் மனோஹரின் நினைவு நாள். (10.1.2006) இராமசாமி சுப்ரமணிய மனோகர், 1925-ம் ஆண்டு தமிழ்நாடு, நாமக்கலில் சுப்ரமணிய ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமி நாராயணன் ஆகும். இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் மனோகரா நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவராவார். தமிழ் நாடகக் கலைக்கு தனிப்பெருமைசேர்க்கும் வகையில் பிரமாண்டமான […]
வரலாற்றில் இன்று – ஜனவரி 9, 1951- ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டடம் 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் […]
வரலாற்றில் இன்று – ஜனவரி 9, 1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921) புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக […]
வரலாற்றில் இன்று – சவுதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்ட நாள் (ஜன.8- 1926) சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1926-ம் ஆண்டு மன்னர் அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் விரிவடைந்த […]
வரலாற்றில் இன்று ஜனவரி 7, 1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து (3500 கி.மீ) முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது. அமெரிக்க தபால் மற்றும் தந்தி சேவையின் தலைவர் வால்டர் கிப்போர்ட் என்பவரும் பிரிட்டிஷ் தபால் தந்தி நிறுவனத்தின் போஸ்ட்மாஸ்டர் ஜெனெரல் ஏவேலின் முர்ரே என்பவருக்கும் இடையில் அந்த பேச்சுப்பரிமாற்றம் நிகழ்ந்தது.
வரலாற்றில் இன்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி சென்னை சென்னையில் திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட தினம் இன்று ஜனவரி 6, 1936. அடையாற்றில் உள்ள தியசாபிகல் சொசைட்டியில் பணியாற்றிய ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்ற ஆங்கிலேயருடன் காதல் வயப்பட்டார். ருக்மிணி தேவியாக இருந்தவர் 1920-ல் ஜார்ஜைத் திருமணம் செய்து ருக்மிணி அருண்டேல் ஆனார். மயிலாப்பூர் கௌரி அம்மா, பந்தநல்லூர் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் பயின்ற ருக்மிணி, தியசாபிகல் சொசைட்டியின் வைர விழா நிகழ்ச்சியில் […]
உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உயரத்தில் குறைந்தவர்தான். பண்புகளில் நெடிதுயர்ந்தவர். 2014 ம் ஆண்டு சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு வேட்டி கட்டி வந்த நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களை கிளப் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து சென்னை கிரிக்கெட் கிளப்பின் நடவடிக்கைக்கு தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் கிளம்பின. தமிழகத்தில் ஓட்டல்கள், கிளப்கள் அனைத்தும் வேட்டி கட்டி வருபவர்களை அனுமதிக்காவிட்டால் […]
• வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது – 1971- ஜனவரி 5 – கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன. • ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான். • ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம். • இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் […]
இன்று ரா.கி. அன்று அழைக்கப்பட்ட தியாகி ஆர்.. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள் ஜனவரி 5, 1902. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக […]
ஜனவரி 4, 1643, இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இன்று. 1643 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார். அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆய்வு மேற்கொண்ட இவர், மனித குலத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். ஆப்பிள் மரத்தில் இருந்த பழம் தரையை நோக்கி விழுவதற்கான காரணத்தை அறிய இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவே […]
ஜனவரி, 4, 1809, லூயி பிரெய்லி பிறந்த தினம்: பார்வையற்றோருக்கு கல்விக் கண் திறந்த லூயி பிரெய்லி பிறந்த தினம் இன்று. 1809 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த இவர், சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக தன் கண்பார்வையை இழந்தார். பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக ஒரு முறையை உருவாக்க வேண்டுமென்ற தீவிர சிந்தனை பிரெய்லிக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நைட் ரைட்டிங் என்னும் முறை பிரெய்லிக்கு உதவிகரமாக அமைந்தது. இம்முறையைப் பயன்படுத்தி 1829 ஆம் ஆண்டு […]
ஜனவரி 3 (1831) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் மகாராஷ்ட்ராவில் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் . இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி பழமைவாதிகள், அவர் செல்லும் வழியெங்கும் […]
வரலாற்றில் இன்று – ஜனவரி 3, 1957 – அமெரிக்காவின் ஹமில்டன் நிறுவனம் மின்கலன் சக்தி மூலம் இயங்கும் உலகின் முதலாவது கடிகாரத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது. ஹமில்டன் 500 எனப் பெயரிடப்பட்ட – சாவி கொடுக்க தேவையில்லாத இக்கடிகாரம் துவக்கத்தில் விற்பனையில் சக்கைபோடு போட்டபோதிலும் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டன. ஹமில்டன் கம்பெனியே தனது தயாரிப்பில் தொடர்ச்சியாக பல முன்னேற்றங்களை செய்து பழுதுகள் இல்லாத கடிகாரங்களையும் பின்னர் வெளியிட்டது. 1969ம் ஆண்டு ஜப்பானின் சீகோ (Seiko ) […]
1760 – பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்ததினம் இன்று. (இ. 1799) 1920 –இந்திய தேசிய ராணுவ வீரர் அப்பாஸ் அலி பிறந்ததினம் (இ. 2014) 1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது. 1976 – அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. 1961 – அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது. 1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது. 1932 […]
வரலாற்றில் இன்று ஜனவரி 2 1959 – உலகின் முதலாவது செயற்கைக்கோள், லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வு செய்ய ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது. லூனா 1 விண்கலமே மனிதனால் வடிவமைக்கப்பட்ட பூமியின் விடுபடு திசைவேகத்தைத் (escape velocity) தாண்டிச் சென்ற முதலாவது விண்கலமாகும். ஜனவரி 3 இல் பூமியில் இருந்து 113,000 கி.மீ. தூரத்தில் இக்கலத்தில் இருந்து மிகப் பெரிய (1 கிலோ கிராம்) சோடியம் வாயுக்கலவை ஒன்று வெளியேறியதில் […]
வரலாற்றில் இன்று – “மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இந்திய சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளுக்காகவும் அவரது ஒப்பற்ற தியாகத்தைப் போற்றும் வகையிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” என்று கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலா தலைமையில் கூடிய அ .தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரலாற்றில் இன்று – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார் (டிசம்பர் 30, 1943). இரண்டாம் உலகப்போரின்போது அந்தமான் தீவுகளிலிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தை ஜப்பானிய படைகள் விரட்டியடித்தனர். பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்பட்டதை இந்தியாவின் ஒரு பகுதி விடுதலை பெற்றதாக நேதாஜி அறிவித்து இந்தியக் கோடியை ஏற்றினார். ஆனால் இதனை காந்திஜி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. அந்தமானில் ஒரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு பதில் வேறு ஆக்கிரமிப்பு […]
வரலாற்றில் இன்று – உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்ட நாள்: 29-12-1993. மொத்தம் 268 படிகள் கொண்ட மலை உச்சியில் நிறுவப்பட்டுள்ள இந்த செம்பிலான சிலை 112 அடி உயரமானதாகும்.புத்தர் அமர்ந்துள்ள நிலையிலான இந்த சிலை பத்து கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரிவதாக சொல்கிறார்கள்.ஹாங்காங் நகருக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் முதலில் காணச்செல்லும் இடம் இதுவாகத்தானிருக்கும்.
வரலாற்றில் இன்று – டிசம்பர் 28, 2007 – நேபாளத்தின் இடைக்கால நாடாளுமன்றம் நாட்டை குடியரசாக அறிவித்து மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. நேபாள ஜனநாயக இயக்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக, மன்னர் ஞானேந்திரா நேபாள நாட்டின் முடியாட்சியை துறந்து, நேபாள நாட்டின் ஆட்சியை மக்களிடம் ஒப்படைத்தார். முடக்கப்பட்டிருந்த நாடாளுமன்றம் 24 ஏப்ரல் 2006இல் மீண்டும் செயல்படத் துவங்கியது. 18 மே 2006இல் நேபாள நாடாளுமன்றம் கூடி, மன்னரின் அனைத்து அதிகாரங்களை பறித்து, நேபாளத்தை மதச்சார்பற்ற நாடாக […]