வரலாற்றில் இன்று – ஜனவரி 29, 1882 உலகின் முதலாவது காரை தயாரித்து சந்தையில் விற்பனை செய்தவர் ஜெர்மனியை சேர்ந்த கார்ல் பென்ஸ் (Karl Benz) என்ற ஆட்டோமொபையில் பொறியியல் வல்லுநர். அவர் நிறுவிய மெர்ஸிடஸ் பென்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பாக அவர் தனது கார் தயாரிப்புக்கான காப்புரிமையைப் பெற்றது ஜனவரி 29, 1882. உலகின் முதலாவது கார் பார்ப்பதற்கு ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் ரிக் ஷா போலத்தான் இருந்தது. படத்தில் கார்ல் பென்ஸ் தனது […]
இன்று ஜனவரி 28ம் நாள் இந்தியாவின் விடுதலைக்காகவும் சமூக, சமயப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்காகவும் பாடுபட்ட பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த நாள்.(1865) பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார். பிரிட்டிஷ் அரசு இவரைக் கைது செய்து பர்மாவுக்கு நாடு கடத்தியது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்தது. 6 மாதங்களில் விடுதலையானார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். […]
வரலாற்றில் இன்று – 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றொருவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையை ஏற்படுத்த இங்கிலாந்தை சேர்ந்த தி ஓரியண்டல் டெலிபோன் கம்பனி சென்னை எர்ரபாலு செட்டி தெருவில் 1881ம் ஆண்டு ஒரு தொலைபேசி நிலையத்தை துவக்கியது. அப்போது அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வெறும் 93 பேர் மட்டுமே. இவர்கள் அனைவரும் சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த பல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள்.அந்த வர்த்தக நிறுவனங்களின் […]
இன்று இந்திய அணு ஆற்றல் துறையின் தந்தை டாக்டர் ராஜா ராமண்ணாவின் பிறந்த நாள் – ஜனவரி 28, 1925. இராஜா இராமண்ணா இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்; எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர்; இசைக்கலைஞர்; சமற்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர்.1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் […]
இன்று சர்வதேச இனப்படுகொலை நினைவு நாள் (Holocaust Remembrance Day ) – ஜனவரி 27 – இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலங்களில் ஜெர்மனியின் நாஜிப்படைகள் ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் ரோமானிய ஜிப்சி இனமக்களைப் பிடித்துவந்து சித்திரவதை முகாம்களில் அடைத்து விஷவாயு மூலம் கொன்றனர். இதுபோல சுமார் அறுபது லட்சம் அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்தனர். இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனியின் நாஜிப்படைகளை ரஷ்யப்படைகள் வென்றன. 1945ம் ஆண்டு ஜனவரி 27ம் நாள் போலந்தின் […]
ஜனவரி 27- வரலாற்றில் இன்று – 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் சோவியத் யூனியனை நிர்மானித்தவரான வரலாற்றுத் தலைவர் விளாடிமிர் லெனின் மரணம் அடைந்தார். லெனினின் உடல் கெடாத வண்ணம் ரசாயன தைலங்களைக் கொண்டு பதப் படுத்தப்பட்டு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் ஜனவரி 27ம் நாள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. துவக்கத்தில் அனைத்து மக்களும் பார்வையிட ஒரு மாத காலம் மட்டுமே லெனினின் உடலைப் பாதுகாத்திடக் கருதியிருந்தனர். அதன்பிறகு மக்கள் லெனின் மீது காட்டிய அளவற்ற […]
வரலாற்றில் இன்று – ஜனவரி 26, 2001 -. இந்தியாவின் 52-வது குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வந்த வேளையில், இந்தியாவின் மேற்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நவீன இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான நிலநடுக்கம் இதுதான். ரிக்டர் அளவில் 7.9 என்று இருந்த இந்த நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. பூஜ் எனப்படும் நகரம் அனேகமாக முற்றிலும் அழிந்தது தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு கொடியேற்பு விழாவில் கலந்துகொள்ள்வதற்காக […]
இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும், இந்தியக் குடியரசின் சட்டங்கள் ஆங்கிலேயர்கள் அமைத்து வைத்ததாகவே இருந்தது அதனை சுதந்திர இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்திடும் நோக்குடன் இந்திய விடுதலைக்குப் பிறகு, பாபு ராஜேந்திரப் பிரசாத் அவர்களின் தலைமையில் புதிய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையால், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு சாசன வரைவுக்குழு அமைக்கப்பட்டு, புதிய சிறப்பு மிக்க இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், […]
இன்று ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. “ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம்’ என வாக்காளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். ஒருவேளை “தேர்தல் விதிகளை எங்களால் முடிந்த அளவு மீறுவோம்” […]
வரலாற்றில் இன்று 1971-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் அறிவிக்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் 1950-ஆம் ஆண்டு முதல் யூனியன் பிரதேசமாக இருந்து வந்தது. அதற்கு முன்னர் இது பஞ்சாப் மாநிலத்தின் பகுதியாக இருந்தது. இமயமலை பகுதியில் அமைந்துள்ளதால் மலை மற்றும் மலை சார்ந்த மாநிலமாக உள்ளது. இந்தியாவில் அதிகளவு தனிநபர் வருவாய் உள்ள மாநிலங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. நீர் மின்சக்தி உற்பத்தி, சுற்றுலா, விவசாயம் ஆகியவை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 24 , 1907 – உலக சாரணிய இயக்கம் இங்கிலாந்து நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவரான ராபர்ட் ஸ்டீபன்சன் ஸ்மித் பேடன் பவுல் என்பவர் தோற்றுவித்தார் இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிரதி பலன் கருதாமல் பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை மாணவர்களிடத்தில் உருவாக்குவதாகும் . மேலும், இது உற்று நோக்குதல், அறிவுத் திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற […]
சென்னை மாநிலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கே.காமராஜ் அவர்களின் தலைமையின் கீழ் இதே நாளில்(23-01-1957) சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் […]
ஜனவரி 21 – வரலாற்றில் இன்று – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்கள் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டன (ஜனவரி 21, 1972)
இன்று ரஷ்ய சோசலிசக் குடியரசின் நிர்வாகத் தலைவராக விளங்கிய விளாடிமிர் லெனின் நினைவு நாள் – ஜன.21, 1924. மாபெரும் அக்டோபர் புரட்சிக்கு தலைமையேற்று நடத்தி ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் தலைவர் லெனின் ஆவார். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான “லெனின்” என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். ஒரு செயல்வீரராக விளங்கிய. லெனின் கார்ல் மார்க்சின் கொள்கைகளை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 12ம் நாள். 1967 – எம். ஜி. ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். அன்று மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். எம். ஜி. ஆருக்கும் எம். ஆர் . ராதாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி ராதா தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கி மூலம் எம். ஜி. ஆரை சுட்டதாக கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவரது இடது காதருகே சுடப்பட்டார். […]
இந்திய இந்து மத துறவி ஆன விவேகானந்தா1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர். இவரின் இயற் பெயர் நரேந்திரநாத் தாத்தா.இவர் இந்திய மாய ராமகிருஷ்ணாவின் தலைமை சீடராக இருந்தவர். பின்னர் தனது பெயரை ஸ்வாமி விவேகானந்தா என்று மாற்றி கொண்டார்1886ம் ஆண்டு ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பின்னர் விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் கோசப்பூர் கணிதத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.இவர் மேற்கத்திய உலகிற்கு வேதாந்த மற்றும் யோகாவின் இந்திய தத்துவங்களை அறிமுகப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். பின்பு 1897 மே மாதம் 1ம் தேதி அன்று […]
பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது […]
இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள் -ஜனவரி 11 – சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கையில் […]
இன்று “ஜெய் ஜவான் ஜெய் கிஸான் ” முழக்கத்தை நம் நாட்டுக்களித்த லால் பகதூர் சாஸ்திரி நினைவு நாள் -ஜனவரி 11, 1966. இவர் இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு தீவிர விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் பதவியேற்று அடுத்த ஆண்டே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் […]
வரலாற்றில் இன்று – ஜனவரி 10, 1966 – தாஸ்கண்ட் உடன்படிக்கை. காஷ்மீர் பிரச்சினை காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையில் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஐ.நா. தலையீடு காரணமாக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருநாடுகளுக்கும் இடையில் சோவியத் யூனியன் சமாதான முயற்சிகள் மேற்கொண்டது. இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான் இருவரும் சோவியத் யூனியனை சேர்ந்த உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஸ்கண்டில் சோவியத் யூனியன் தலைவர் அலெக்சி […]