இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949) சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் – மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது 1905 ஆம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 […]
வரலாற்றில் இன்று – பிப்ரவரி 28, 1948 – இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் படைகள் முற்றிலுமாக வெளியேறின. 1947 – ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா விடுதலை ஆனபோதும் இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் படைகள் உடனடியாக வெளியேறவில்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கான பொறுப்பை முழுமையாக இந்தியாவின் சுயேச்சை ராணுவம் ஏற்றுக்கொள்ளும் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த . பிரிட்டிஷ் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன. கடைசி குழு (Last Batch ) வெளியேறிய தினம் 1948, பிப்ரவரி 28 ஆகும்.
இன்று இந்தியாவின் முதலாம் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் நினைவு நாள் 28 பிப்ரவரி 1963. 1946ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் […]
தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28-ம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர். சி.வி. ராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்த நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் 1930ஆம் ஆண்டு இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தி அறிவித்தது. […]
பிப்ரவரி 27, 2008. – இன்று பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா நினைவு நாள் இவர் தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர். ‘எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்’ என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர். இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது. சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் […]
பிப்ரவரி 26, 1991 — வரலாற்றில் இன்று – உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…! உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser). இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய […]
பிப்ரவரி 25, 2001 – கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று. சுமார் இருபது ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். இந்த காலக்கட்டத்தில் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ரன்கள் குவித்தார். 80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார். பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார். அதில் இரண்டு முச்சதங்களும், 12 இரட்டை சதங்களும் ஆகும். 22 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்த சாதனையும் புரிந்துள்ளார்
பிப்ரவரி 25, 1988 வரலாற்றில் இன்று – இந்தியாவின் தரை – குறு இலக்குகளை இலக்குகளைத் தாக்கக்கூடிய, ஆணு ஆயுதம் சுமந்து செல்லும் திறன் படைத்த (SRBM ) பிருத்வி -1 ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் அஞ்சின.மேலும் அமெரிக்கா இந்நிகழ்வுகளுக்கு ஆட்சேபித்தது.
பிப்ரவரி 24, 2008 — வரலாற்றில் இன்று – கியூபா அதிபர் பதவியிலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ ராஜினாமா செய்தார். பிடரல் காஸ்ட்ரோ. 1959 ல் கியூபா அதிபராக பதவியேற்றார். அண்டை நாடான அமெரிக்காவின் உருட்டல் மிரட்டல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக எதிர்த்து நின்று ஆட்சி செய்து க்யூபா மக்களின் அன்பையும் ஆதரவினையும் பெற்றார். உலக நாடுகளின் பாராட்டுதல்களையும் பெற்றார். சோவியத் யூனியன் முதல் பல சோஷலிச நாடுகளில் கம்யூனிசம் தோல்வியடைந்த பின்னரும்கூட கம்யூனிசக் கொள்கைகளை வெற்றிகரமாக க்யூபாவில் தூக்கிப் […]
வரலாற்றில் இன்று பிப்ரவரி 23 , 1905 – ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. முதல் ரோட்டரி சங்கம் உருவாக்கியவர் பால் பி ஹாரிஸ் என்பவராவார். மூன்று வர்த்தக நண்பர்களுடன் சிகாகோ நகரில் உள்ள டியர்பார்ன் தெருவில் உள்ள ஹாரிசின் நண்பர் கஸ்டவ் ஈ லோஹிர் என்பவரின் அலுவலகத்தில், பிப்ரவரி 23, 1905 அன்று கூடி சங்கத்தைத் துவக்கினர்.துவக்கத்தில் இவர்கள் ஒருவொருவர் அலுவலகங்களி லும் அடுத்த வந்த வாராந்திர சங்கக் கூட்டங்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டன. எனவேதான் இவ்வமைப்புக்கு […]
அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்பட்டு வரும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று – பிப்ரவரி 22,1732. அமெரிக்க சுதந்திரப் போரில் அவர் தலைமைப் பொறுப்பு ஏற்ற 1775ஆம் ஆண்டு முதல், சுதந்திர அமெரிக்காவின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, இவர் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை […]
இன்று பிப்ரவரி 22ம் நாள் மகாத்மா காந்தியின் துணைவியார் கஸ்துரி பாய் காந்தியின் நினைவு தினம். கஸ்துரி பாய் தன் கணவர் ஏற்ற தேசிய போராட்டப் பாதையில் அவருக்கு துணையாக தனது வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்தவர்.. காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு சிறை சென்றவர். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. சிறு வயதிலேயே […]
கடலோரக் காவல்படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடலோர பாதுகாப்பு மட்டுமின்றி கடல் வளத்தை பாதுகாப்பதிலும் கடலோர காவல்படை சிறந்து விளங்குகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெருமிதம் அடைகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவு நாள் – பிப்ரவரி 1, 2003 அன்று விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது இறந்தார் கல்பனா சாவ்லா (Kalpana Chawla, . இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த இவர். பின்னர் அமெரிக்கா சென்று அங்கு குடியுரிமை வாங்கியவர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் விண்வெளி ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு STS-107 என்ற கொலம்பியா […]
இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். பக்தவச்சலம் நினைவு நாள் ஜனவரி 31, 1987 . இவர் 1963ம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் ரீதியாகவும், தனிமனிதன் என்ற முறையிலும், மனிதாபிமான உணர்வோடு வாழ்ந்தவர் இவர். பக்தவச்சலம் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்குப் பின்னரும், அறிஞர் அண்ணாதுரையின் ஆட்சிக்கு முன்னரும் தமிழக முதல்வராக இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். இவரது பதவிக்காலத்தோடு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் தான், […]
இன்று தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் நினைவு நாள் ஜனவரி 31, 2009. ‘தாமரைக்குளம்’ படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர். தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அபூர்வ […]
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 71வது நினைவுநாள் நாடுமுழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.மகாத்மா காந்தியின் 71-வது நினைவு நாளையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாட்டின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதரை சற்றே நினைவுகூர்வோம்: சாத்வீக வழிப் போராட்டங்களால் நாட்டின் விடுதலைக்கு […]
வரலாற்றில் இன்று ஜனவரி 29, 1595 ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜுலியட் நாடகம் முதன் முறையாக அரங்கேறிய தினம். உலகின் தலைசிறந்த காதல் காவியங்களுள் ஒன்று ரோமியோ ஜூலியட். இத்தாலிய பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாடகத்தை வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதினார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட நாடகம் இதுவே ஆகும்! சோகமான முடிவைக் கொண்டுள்ள இந்த காதல் கதை உலகின் பல்வேறு மாற்றப்பட்டு திரைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் வெளிவந்துள்ளது.இந்த நாடகத்தை எழுதி முடிக்க ஷேக்ஸ்பியருக்கு 5 ஆண்டுகள் பிடித்துள்ளதாக கருதப்படுகிறது. […]
வரலாற்றில் இன்று ஜனவரி 29 , 1946 – பிற நாடுகளின் விவகாரங்களை வேவு பார்க்கும் நோக்கத்தோடு (USA) ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) ஜனாதிபதி டுரூமென் அவர்களால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு அடுத்த ஆண்டே CIA என்று பெயர் மாற்றப்பட்டது. இதுவே பின்னர் பிற நாடுகளில் சதி வேலைகளை அரங்கேற்றும் நிறுவனமாகியது.