ஒக்கி புயலில் உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்களின் உறவுகளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தந்த கேரன முதல்வர் பினராய் விஜயன். ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது. இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM […]
உச்சநீதிமன்றமானது, மறுமணம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் செயல்படாத அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கைவிடப்பட்ட விதவைகளின் நலனுக்கும் மறுவாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மறுமணத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்நிலையில் செயல்படாத அரசுக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் பதற்றமான நாளாக ஆண்டு தோறும் கருதப்படுகின்றது இந்நாளை முஸ்லிம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் இந்நாளில் இஸ்லாமிய சகோதர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம் .அதனால் டிசம்பர் 5ம் தேதி முதலே போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபடுவர் .இதன் காரணமாக டிசம்பர் 6 என்றாலே போலீசாருக்கும் மக்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும் . இப்படி ஒரு மிகப்பெரிய பதற்றமான நாளில் பட்டியல் […]
கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு… ஒக்கி புயலின் தாக்கத்தால் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 20 இலட்சமும் காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 5 இலட்சமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என கேரளா இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது.
ஒகி புயல் வருவதற்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மீட்கவும் புயலில் சீக்கி உயிரிழந்த தூத்துக்குடி மீனவர்கள் உடலை பெறுவது தொடர்பாக தமிழக அரசு செய்ய வேண்டிய வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) தூத்துக்குடி மாவட்ட குழு செய்து வருகிறது. முதல்வர் பினராயி விஜியனிடம் போனில் பேச்சுவார்த்தை: இறந்து போன தூத்துக்குடி மீனவர் உடலை கொண்டு வர கேரளா முதல்வர் பினரயி விஜயன் அவர்களோடு CPIM மாநிலசெயலாளர் G.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் அனைத்து உதவியும் கேரளா அரசு […]
குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிகளின் பேரணி பொது கூட்டம் என கலக்கி வரும் வேளையில் படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வரும் குஜராத்தின் இளம் அரசியல் தலைவராக உருவெடுத்து வருகிறார் ஹர்திக் படேல் .இவர் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இவருக்கான ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இதனையடுத்து அவர் நேற்று சூரத் நகரில் மாலை நடத்திய பேரணியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்களும் ,வாலிபர்களும் பங்கேற்றுள்ளனர். இவர் தான் தற்போது ஆண்டுகொண்டிருக்கும் பிஜேபிக்கும்,எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]
“மின்னணு வாக்குப் பெட்டிகள் இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி உத்திரபிரதேசத்தில் ஒரு இடம் கூட வெற்றி பெறமுடியாது. “ – பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியது. ஏற்கெனெவே நாடு முழுக்க பல சமூக ஆர்வலர்களும், சில கணினி வல்லுனர்களும், இடதுசாரிகளும், டெல்லியில் கேஜ்ரிவாலும் கூறிய புகார் தான். இப்போது இவர் கூறுகிறார். ஆனால், தொடர்ந்து இந்த மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான விளைவை சாதித்துக் கொண்டு ஆளும் கட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களை […]
உத்திரபிரதேச மாநிலத்தில் ஹர்காவோன் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ சுரேஷ் ராகி என்பவரின் வீட்டு இரண்டு எருமை மாடுகளைக் காணவில்லையாம் . அவர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் இரண்டு தனிப்படை அமைத்து காணாமற்போன எருமை மாடுகளைத் தேடிக்கொண்டுள்ளார்களாம்…என்னடா இது டிரென்ட்டா இருக்கு…!!
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முதலிரவு அன்று கட்டிய மனைவியை பிளேடால் அறுத்த கொடூர கணவனை கைது செய்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். சித்தூரை சேர்ந்த ஆசிரியர் ராஜேஷ_க்கும், அதே பகுதியை சேர்ந்த வைத்தியர் சைலஜாவுக்கும் சமீபத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமண தினத்தன்று பல்வேறு கனவுகளுடன் முதலிரவு அறைக்குள் சென்ற சைலஜா சிறிது நேரத்தில் அலறியடித்து கொண்டு வெளியே வந்தார். இதனால் பெண் வீட்டார் குழப்பம் அடைந்தாலும் பின்னர் சைலஜாவை சமாதானப்படுத்தி முதலிரவு […]
புகழ் பெற்ற மேடம் துஸாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகமானது, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்பட உலகின் பல நாடுகளிலும் முக்கிய நகரங்களில் இந்த அருங்காட்சியகம் இருக்கிறது. இந்த அருங்காட்சியகங்களில் உலகப் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், டெல்லியிலும் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்து பணிகள் ஏற்கனவே நடந்துவந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், டெல்லியில் மெழுகுச் சிலை அருங்காட்சியகம் நேற்று பொதுமக்களின் பார்வைக்கு நேற்று திறக்கப்பட்டது. இது உலக அளவில் இது […]
கப்பற்படை தினத்தை முன்னிட்டு 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் அணுஆயுத தாக்குதல் திறன் கொண்டவை ஆகும். இத்திட்டம் தொடர்பாக, நேற்று டெல்லியில் கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில்: ‘அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் […]
இந்தியாவில் அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்க பட்டுவிட்டது. இதனை எதிர்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகளுக்கு ஆதார் எண் இணைக்க கால அவகாசம் நீடிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இருப்பினும், தற்போது, வங்கி கணக்கு, போன் நம்பர் ஆகியவைக்கு ஆதார் எண் இணைக்க கடைசி நாள் நெருங்கி விட்டது. டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட ஆதார் இணைப்புகள் : 1. பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும். […]
தமிழகத்தில் நிஸான் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை தருவதாக உறுதி அளித்தபடி தமிழகஅரசு தராததால், ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு தமிழக அரசின் மீதான புகார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.மேலும் நிஸான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையானது தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தால் தமிழக தொழில்துறை சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இன்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தல் ,வாக்குசாவடி,வார்டு பொறுப்பார்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியவை தொடர்பாக தங்களது கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர்வாட்டி சட்டமன்றத் தொகுதியின் குடா கவுஜியில் அமைப்பு மற்றும் மாநிலத்துடன் தொடர்புடைய முக்கியமான விஷயங்களைக் கலந்துரையாடினார்.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் (BJP4Gujarat) என்ற பெயரில் புதிதாக ஒரு செயலியை(application) உருவாக்கியுள்ளனர் குஜராத் பிஜேபி கட்சியினர்.மேலும் இந்த செயலி மூலம் குஜராத் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து குஜராத் முழுவதும் உள்ள பிஜேபி கட்சியின் பெண் ஊழியர்களிடம் வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசுகிறார்.இது தற்கலிகமாக சட்ட மன்ற தேர்தலுக்கு மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது என பிஜேபி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கடுமையான மழை மற்றும் காற்று காரணமாக இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்த தேசிய தொலைதொடர்பு அமைச்சர் ஜெனரல் சஞ்சய் குமார் அவர்களை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு குழு (என்.டி.ஆர்.எப்) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, இன்னும் பல அணிகள் தற்காலிகமாக கைவசம் வைக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகம் […]
உத்தரபிரதேசத்தில் மாநில நகராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்த பின் அம்மாநில தலைநகர் லக்னோவில் பெண் மேயர் இதுவரை தேர்வு செய்யப்பட்டது இல்லை. இம்முறை லக்னோ மேயர் பதவியானது சுழற்சி முறையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் லக்னோவில் சன்யுக்தா பாட்டியா என்ற பெண் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 100 வருடங்களுக்கு பிறகு தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் மேயராவார். லக்னோ மேயர் தொகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதன் காரணமாக அனைத்து கட்சிகளும் பெண் வேட்பாளர்களை முன்நிறுத்தின. பாஜக சார்பில் சன்யுக்தா […]
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங்,இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் வாயிலாக அவர் கூறியதாவது “நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தந்து காத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை குறைப்பதற்கான அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.