ஹரியானா மாநிலத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் கணித ஆசிரியர் அந்த மாணவனின் வீட்டில் புகார் அளிக்க போவதாக கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசிரியரை கூர்மையான ஆயுதத்தால் 10 கும் அதிகமான முறை தாக்கினான். இதை பற்றி அறிந்த போலிசார் அந்த மாணவனையும் அவனுக்கு உடந்தையாய் இருந்த சக மாணவனையும் கைது செய்தனர்.
Department of Post – IPPB ஆட்சேர்ப்பு அறிவித்தல் 2017 220 பல்வேறு காலிபணியிடங்கள் உள்ளன. தகுதி: பட்டப்படிப்பு பட்டம் சம்பளம் ரூ. 42020 – 51490/- PM More Details => http://bit.ly/2g1WBiu வேலையிடம்:சென்னை
பஞ்சாப் மாநிலம் குர்தாஷ்பூர் இடைதேர்தலில் பிஜேபி வேட்பாளரை 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர்.
உத்திரபிரதேசத்தில் தாத்ரி என்ற ஊரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக குற்றம் சாட்டி முகமது இக்லக் என்ற வயோதிகரை பசு பாதுகாப்பு படையினர் 15 பேர் கொண்ட கும்பல் ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்கி கொலைசெய்ததனர்.. கொலையாளிகள் கைது செய்யப்பட போதிலும் அடுத்த வாரமே ஜாமீனில் வெளி வந்து விட்டனர். அந்த வழக்கில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையில் அந்த கொலையாளிகள் 15 பேருக்கும் அரசு நிறுவனமான தேசிய அனல் மின் உற்பத்தி நிலையத்தில்உள்ளூர் பா.ஜ. க. எம்.எல்.ஏ […]
இந்தியாவின் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ஆறாம் வயதில் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில் டீ விற்றதாக தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் பல பொதுக்கூட்டங்களில் சொல்லிக்கொண்டு இருந்தார்.ஆனால் வாட்நகர் ரயில் நிலையம் திறக்கப்பட்டதே 1973 ஆம் ஆண்டுதான் ஆனால் பிரதமர் மோடி அவர்கள் பிறந்தது 1950 ஆம் ஆண்டு ஆகும்.. அப்படியானால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அப்போது 23 வயது ஆகியிருக்குமே! அப்போது அவர் ரயில் நிலையத்தில் தனது […]
ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீகல்யான் அரசு முதுநிலை பட்ட பெண்கள் கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த கல்லூரி மாணவ பேரவையை இந்திய மாணவர் சங்கம்(SFI) கைப்பற்றியது. ஆர்எஸ்எஸ்/பிஜேபியின்-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பார்சித்(ABVP) பணத்தை தண்ணியா செலவழித்தும் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. அனைத்து இடங்களையும் எஸ்எப்ஐ கைப்பற்றியது. அந்த பேரவையை துவங்கி வைப்பதற்காக சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் அழைக்கப்பட்டார். அவருடன் சிகார் விவசாயிகள் […]
இந்தியாவில் செயல்பட்டுவரும் TATA DOCOMO, RELIANCE என்ற இந்த இரு தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறார்கள். எனவே மேற்படி சிம் வைத்திருப்பவர்கள் MNP மூலம் உடனடியாக வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிக்கொள்ளவும் என அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
டெல்லி பல்கலைகழத்தை சேர்ந்த sfi மாணவர்கள் டெல்லி மெட்ரோ ரயில்வே கட்டணமானது 100% உயர்த்த பட்டிருப்பதைக் கண்டித்து டெல்லி மெட்ரோ ரயில்வே நிலையத்தில் போராட்டம் நடத்தினார்கள்.. ஆனால் டெல்லி மாநில அரசாங்கமோ தனக்கு மெட்ரோ ரயில்வேவை காட்டும் அதிகாரம் இல்லை எனக்கூறி பின்வாங்கியுள்ளது என்பதும் குறுப்பிடத்தக்கது.
பிஜேபியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா கேரளாவில் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கூறி அக்கட்சியின் மாநில குழு சார்பில் “ஜனரக்ஷன்” என்னும் பெயரில் பேரணியை நடத்தினார்கள். அப்போது கேரளா மக்கள் அமித்ஷாவை”அல்லாவதிஷாஜி” அதாவது “அருவருப்பானவன்” என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பதிவிட்டனர். மேலும் பேரணிக்கு கேரளா மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தனது பேரணியை பாதியிலே விட்டுவிட்டு டெல்லி புறப்பட்டார் அமித்ஷா . இதனையடுத்து மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) அலுவலகத்தை பிஜேபி […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்ககோரி கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கானது சட்ட வரைவு அமர்வு மன்றதிற்கு மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கோவில்களில் பெண்களை அனுமதித்தால் அது பாலியல் சுற்றுலா தளமாகிவிடும் என்று சபரிமலை கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் கூறியுள்ளார். அவரது இந்த கருத்திற்கு பெண்ணிய ஆர்வலர்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பிவருகின்றனர்.
முகேஷ் அம்பானியின் ஜியோ செல்ஃபோன் சேவை நிறுவனமானது கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 271 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 21 கோடி ரூபாய் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்தாண்டு அது சுமார் 13 மடங்கு அதிகரித்துள்ளது. எனினும் அவரது மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் கடந்த காலாண்டில் 8 ஆயிரத்து 109 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் அவருடைய சொத்து மதிப்பு […]
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் முற்போக்கு எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் (55), கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனது வீட்டின் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பலரும் அவருக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் தொடங்கினர் . இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் குற்றவாளிகளின் மாதிரி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழு […]
கடந்த 5 நாட்களில் பிஜேபியின் யோகி ஆதித்தியநாத் முதல்வராக ஆளும் உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் போதிய பராமரிப்பின்றி மேலும் 75 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுகாதார பராமரிப்பில் உத்திர பிரதேச மாநிலமே இந்தியாவுக்கு முன்னோடியாக திகழ்கின்றது என்று நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள். மேலும் ரூ.196 கோடியில் ராமர் சிலை இதிகாச பாத்திரமான, ராமருக்கு, ரூ. 195 கோடியே 89லட்சம் செலவில் சுமார் 328 அடி உயரத்திற்கு சிலை அமைக்கஉத்தரப்பிரதேச பாஜக […]
நேற்று டெல்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ”தான் அரசியலுக்கு வந்தது ஒரு மிகப் பெரிய விபத்து எனவும் பிரதமர் பதவிக்கு தன்னை விட பிரணாப் முகர்ஜி தான் பொருத்தமானவராய் இருந்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனாலும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், தன்னுடன் சுமூகமாக பிரணாப் முகர்ஜி பழகினார்” என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளியீட்டு […]
புதுடில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று (13ம் தேதி) முக்கிய முடிவு எடுக்கிறது டெல்லி உச்சநீதிமன்றம். கேரளாவிலுள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே கோயிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி […]
டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் திபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சுழல் உருவாகி உள்ளது.
புதுச்சேரியில் கரும்புக்கு சரியான கொள்முதல் விலைக்கோரி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர் .
வருகிற டிசம்பர் 18ஆம் தேதிக்குள் ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று தேர்தல் கமிஷன் ஹிமாச்சல் தேர்தல் அட்டவணையை மட்டும் அறிவித்துவிட்டு, குஜராத் தேர்தலை அறிவிக்கவில்லை. நவம்பர் 9ஆம் தேதி ஹிமாச்சலில் தேர்தல் நடை பெறும் என்றும், ஆனால், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் இது காலம் வரை 6மாத காலத்திற்குள் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் […]
டில்லியில் உள்ள பாஜக சட்டபேரவை உறுப்பினர் ஜிபேஷ் குமார் அவரது வீடு அருகில் உள்ள ரோஹினி செக்டார்-23ல் சென்று கொண்டிருந்த பொது இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள்புதிய ஐஃபோன் 7 ரக மொபைலை பறித்து சென்றனர். ஜிபேஷ் குமார் அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிற்றனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி .சாக்கடை வாளியுடன் கொசு வலையுடன் தெற்கு மண்டல அலுவலகத்தில் புறநகர செயலாளர் பேச்சிமுத்து தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பூமயில்,புறநகர குழு உறுப்பினர் டேனியல் ,வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆனந்த்,மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர் .