இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 12 நாட்களாக நீடித்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். ஆனாலும், ஈரான் உடனடியாக தாக்குதலை நிறுத்தவில்லை. ஆனால், இஸ்ரேல் உடனான போரை நிறுத்துவதாக ஈரான் […]
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்தவில்லை. முன்னதாக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பதிவில், ”தற்போது, எந்தவொரு போர்நிறுத்தம் அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்தும் எந்த “ஒப்பந்தமும்” இல்லை. இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது. ஆம், அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை (இந்திய நேரப்படி அதிகாலை 4:10 மணி முதல் 4:35 மணி வரை) ஈரானின் 3 அணு ஆயுத தளங்களை 7 B-2 குண்டுவீச்சு விமானங்களுடன் தாக்கியது. அதன்படி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் திட்டத்தை […]
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் கடுமையாகி வருகிறது, அதே நேரத்தில் ஈரானும் அமெரிக்காவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன. ஆம்.., ஈரான் – இஸ்ரேல் போரில் இஸ்ரேலை ஆதரித்த அமெரிக்கா, கடந்த சனிக்கிழமை இரவு ஈரானின் மூன்று முக்கியமான அணு ஆயுதத் தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்கியது. அதன் பிறகு ஈரான் அமெரிக்காவிற்கு […]
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், மேற்கு ஆசிய உச்சக்கட்டத்தில் பதற்றம் அடைந்துள்ளன. இருப்பினும், கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் நடந்த தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை. ஈரான் முன்பே அறிவித்ததால் காயம், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஈரானுக்கு நன்றி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது பெரும் சந்தேகத்தை கிளப்புவதால், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணாமாக, கத்தார், […]
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் பதிவில், ”இன்னும் 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் தொடங்கும், ஈரான் முதலில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும், அதைத் தொடர்ந்து 12 மணி நேரம் கழித்து இஸ்ரேல் அமல்படுத்தும். இதன் மூலம் போர் அதிகாரப்பூர்வமாக 24 மணி நேரத்தில் முடிவடையும். இதை “12 நாள் போர்” என்று அழைக்க வேண்டும், இந்தப் […]
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்று இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் நீலகிரி, காட்மாண்டுப் பகுதிகள் அல்லது கோயம்புத்தூர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு […]
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்காக, பணம் பெற்றுக்கொண்டு மதிப்பெண்களை மாற்றியமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மாணவருக்கு மதிப்பெண்களை மாற்றுவதற்கு 90 லட்சம் ரூபாய் வரை கோரப்பட்டதாகவும், பணம் செலுத்தினால் மதிப்பு மாற்றப்பட்ட மதிப்பெண்கள் […]
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கும் சூழலில், தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றமான சூழலில், நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் தரப்பு எச்சரித்திருந்தது. எனவே, அங்கு பதற்றம் உச்சத்திற்கு சென்றிருக்கும் சூழலில், ஈரானின் […]
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக […]
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா குறித்து இழிவாக விமர்சிக்கப்பட்ட வீடியோ ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, மற்றும் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மேடையில் அமர்ந்து இந்த வீடியோவை கண்டு ரசித்ததாக […]
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த பதற்றமான சூழலில்,நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்தும் இருந்தார். ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி […]
இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி தொடங்கிய தாக்குதல் 10வது நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. தற்போது, ஷாத், டெஸ்ஃபுல் மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள ஆறு ஈரானிய இராணுவ விமான நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஈரானின் கிழக்கு, மேற்கு மற்றும் […]
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில் இருந்து ராமதாஸ் நீக்கி அதிர்ச்சி அளித்து வருகிறார். அந்த வகையில், இப்பொது சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளராக இருந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவின்படி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சதாசிவத்திற்கு பதிலாக ராஜேந்திரன் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சி நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் நீக்குவது தொடர்பாக […]
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது. முருகன் மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் இதில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பலவிதமான நிகழ்ச்சிகள், உரைகள், கலை நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன. இந்த மாநாடு ஆன்மீக நிகழ்வாக […]
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான முருக பக்தர்கள், 15 நாட்கள் விரதம் இருந்து மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்றார். மேலும், பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த மாநாடு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்வாக அறிவிக்கப்பட்டாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், […]
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. ஈரானின் அணு உலகைகள் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஈரானிய இந்த நடவடிக்கை உலக எரிசக்தி சந்தையில் கவலைகளை எழுப்பியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் குறைப்பு ஏற்படக்கூடும். இது எரிசக்தி விலைகளை அதிகரித்து […]
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா. மேலும், ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை டொனால்ட் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார். இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தாக்குதல் குறித்து தனது ட்ரூத் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் அதிபர் டிரம்ப், ”அமெரிக்க தாக்குதலில் ஈரானுக்கு மிகப் பெரிய […]
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. தேவாலயத்திற்குள் நுழைந்த ஒருவர் வெடிகுண்டு பெல்ட்டை வெடிக்கச் செய்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிரியாவில் ஒரு வழிபாட்டுத் தலத்தின் மீது நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த தாக்குதலுக்கும் ISIS அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என […]
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதில், பொதுமக்கள் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளது. அதே நேரம் 400 பேர் பலியானதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 3,056 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சுழலில், ஈரானின் அணு உலகைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் மிகுந்த கோபத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தக்க […]