திருமாவளவன் அவர்களிடம் அவரது தாயாரின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விசிக தலைவர் திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமாவளவன் அவர்களிடம் அவரது தாயாரின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று காலை எட்டு மணியளவில் தமிழக […]
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்துகிற போராட்டம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கே.எஸ்.அழகிரி ட்வீட். மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. மேலும், இத்திட்டத்தை திரும்ப பெறுமாறு அரசியல் தலைவர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்று […]
மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட். சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் கே.கே நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்ற காரின் மீது மரம் , வங்கி மேலாளர் வாணி கபிலன் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் […]
சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார். அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி […]
அதிமுகவில் அனைவரும் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி. அதிமுகவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுகவில் அனைவரும் ஒற்றை தலைமையை விரும்புகின்றனர். அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமிதான் தலைமையேற்க வேண்டும் என […]
பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு என அறிவிப்பு. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கி வைக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பள்ளி முடித்துக் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள மாணவச் செல்வங்களின் கைப்பிடித்து உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் “கல்லூரிக் கனவு” நிகழ்வை நாளை […]
டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உடன் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு சந்தித்து, குடியசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு கோரினார். இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் […]
கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியதால் பரபரப்பு. கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை குண்டர்கள் சூறையாடியுள்ளனர். சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்து அலுவலகம் உள்ளே புகுந்த கும்பல் கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. அந்த கும்பல் இந்திய மாணவர் சங்கத்தின் கொடியை ஏந்திருந்தாக கூறப்படுகிறது. இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அலுவலகத்தை சூறையாடியதாக இளைஞர் காங்கிரஸார் குற்றசாட்டியுள்ளனர். கேரளா […]
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி. சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர், செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு. சில தலைவர்களுக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணியமாக நடத்தவில்லை. பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். ஒற்றை தலைமை என ஏற்கனவே சொல்லி தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதுபோல் […]
சென்னையில், சசிகலா வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர் சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என கோஷமிட்டனர். அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு பின் அதிமுக கட்சிக்குள் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், சென்னையில், சசிகலா வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர் சசிகலா அதிமுகவை வழிநடத்த வர வேண்டும் என கைகளில் கொடிகளை ஏந்தியபடி […]
டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீலகிரி உள்ளிட்ட மலை மற்றும் காடு சார்ந்த மாவட்டங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும் பாதிப்புக்குள்ளாகின்றன என புகார்கள் எழுந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வண்ணம் நீலகிரி மாவட்டதில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்து விட்டு கூடுதல் கட்டணமான ரூ.10-ஐ திரும்ப […]
நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து. தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுகவுக்கு கூட்டு தலைமை வேண்டும், கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். 23 தீர்மானங்களை தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத் தக்கது என அன்புமணி ராமதாஸ் ட்வீட். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை […]
அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு. தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும்,மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையத்தில் மனு: குறிப்பாக,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. இதனிடையே,டெல்லி சென்றுள்ள […]
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். கட்சி சட்ட திட்டங்களை இயற்றவும் திருத்தும் செய்யவும் அதிகாரம் கொண்டது அதிமுக பொதுக்குழு. […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது.மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார். மேலும்,இதனையடுத்து,அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி காலை 9.15-க்கு கூடும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.இந்த நிலையில்,அதிமுக பொதுக்குழு மேடையிலிருந்து […]
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு,மத்திய அரசு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. இதனை முன்னிட்டு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் […]