தருமபுரியில் ஒரு திருமண விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதிலிருந்து, ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். வந்தால் மக்களுக்கு நல்லது மட்டுமே செய்வார். டிசம்பர் மாதம் அவரது பிறந்தநாள் என்பதால் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பேசுவார். மேலும், அரசியலுக்கு வந்தால் தமிழக மக்கள் அவரை ஏற்றுகொள்ள வேண்டும். ‘ எனவும் தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான சியான் விக்ரம் நடித்துள்ள ஸ்கேட்ச் திரைபடத்தின் டீசர் 7மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.இதை விக்ரம் ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்பம் ‘விஸ்வரூபம்’. இப்படம் பல பிரச்சனைகளை தாண்டி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகியும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக ஒரு வாரம் ஆகியும் வெளியானதில் இருந்து ரசிகர்களை கவர்ந்தது.மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டது . இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகமான “விஸ்வரூபம் 2” இன்னும் ஒரு வாரத்தில் அதன் இறுதிகட்ட பாடல் படபிடிப்பு சென்னையில் முடிந்ததும் இப்படத்திற்கான ப்ரோமோசன் வேலைகள் துவங்குமாம் . மேலும் இப்படமானது வரும் 2018 ஆண்டு […]
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஸ்ணு விஷாலும், இயக்குனர் எழிலும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். இப்படத்தை இஷான் ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இப்படத்தில் மீதும் D.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும் யோகி பாபுவும் இப்படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தில் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதியை தடை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ் குமார். பிஜேபி எம்.எல்.ஏ.யான நீராஜ் குமார் பாபுலால் முதல்வருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.அக்கடிதத்தில் அவர் கூறியதாவது “இப்படமானது ராஜபுத்திர மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை தவறாக சித்தரித்து வெளிவந்துள்ளது.இப்படத்தில் ராணி பத்மாவதி அலாவுதீன் கில்ஜியை காதலித்த வர்ணிக்கப்பட்டுள்ளது.ஆகவே இப்படமானது இந்துகளின் மனங்களை புண்படுத்துவது போன்று உள்ளது.ஆகவே இப்படத்தினை வெளியிட தடை பிறப்பிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார். ஆகவே முதல்வர் நிதிஷ்குமாரும் […]
தமிழில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமாகி காக்கா முட்டை, குற்றமே தண்டனை, தர்மதுரை போன்ற படங்களில் மூலம் தனது தரமான நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையை நிருபித்துள்ளார். தற்போது இவருக்கு துபாயில் நடைபெற்ற ஏசியா விஷன் மூவி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த பல்மொழி நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா […]
சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ஸ்கெட்ச் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் பாடல்கள் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட உள்ளதாக இப்படத்தின் கதாநாயகன் விக்ரம் தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார். சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்பத்தை கலைப்புலி தாணு தனது V சிரியேசன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார்.
தமிழ்சினிமாவில் காமெடியனாக கொடிகட்டி பறந்தவர் நடிகர் சந்தானம். இவர் நடித்தாலே படம் வெற்றிபெற்றுவிடும். அப்படி இருந்தவருக்கு திடீரென கதாநாயகனாக உருவெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த படங்கள் ஓரளவுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. இன்னும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை. தற்போது அவர் கதாநாயகனாக நடித்துவரும், ‘சக்கபோடு போடுராஜா’ எனும் படத்திற்க்கு முன்னனி நடிகர் சிம்பு இசையமைக்கிறார். நடிகர் சந்தானத்தை சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு அறிமுக படுத்தியதும் சிம்புதான். இவர் இசையமைத்து ஏற்கனவே ஒரு […]
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இதில் இவருடன் கெளதம் கார்த்திக் உடன் நடிக்கிறார். இதனை ஆருமுககுமார் எனும் அறிமுக இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நிகரிகா, ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கான சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் நவம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என இப்படத்தின் இன்னொரு ஹீரோ கெளதம் கார்த்திக் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
தல தளபதி போட்டி கடைசியாக 2012 ம் ஆண்டு நிகழ்ந்தது.பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம் படமும் விஜய் நடித்த ஜில்லா படமும் ரிலீஸானது. இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தந்தது. அஜித்தின் “விசுவாசம்” படத்தின் படபிடிப்பானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளது.அதுபோலவே தளபதி விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் படபிடிப்பு கூட ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம். தளபதி62 இயக்குனர் முருகதாஸ் தீபாவளி விருந்தாக படம் வரும் என உறுதியாக தெரிவித்து இருந்தார்.இப்போது “விசுவாசம்” படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். […]
“பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் ஒரு இந்துத்துவ கோஷ்டி அடி.வெட்டு.குத்து.கொலை என்று நாட்டை ரணகளமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தில் ஒன்றுமே பேசாமல் மரண அமைதி காப்பதேன்?” -நடிகரும்,பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார். சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். வெயின்ஸ்டீன் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு […]
பத்மாவதி படத்தை பெருமளவில் ஹிந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படம் சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை நாங்கள் வெளியிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது மேற்கு வங்காளம் மாநிலத்தில் பத்மாவதி படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்து தருவோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ரஜினி-கமல், விஜய்-அஜித் என அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் நடிகர்களுக்காக சண்டை போட்டு கொள்வார்கள். அது சில நேரம் எல்லைமீறி சாதிசண்டையாகவும் மாறியுள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் தற்போது சியான் விக்ரம் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சியான் தலைமை ரசிகர்மன்றம் சார்பில் ஓர் அறிக்கை ஒன்று டிவிட்டரில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்கள் யாரும் தங்கள் சாதி அடையாளங்களை போஸ்டர்களில் வெளிபடுத்தகூடாது எனவும், அப்படி ஈடுபடுவர்களுக்கும் மன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனை அகில இந்திய […]
மோகன் ராஜா இயக்கத்தில் சிவர்கர்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ரெமோ படத்தை தயாரித்த R.D.ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் கருத்தவேல்லாம் கலீஜாம், இறைவா பாடல்கள் வெளியாகி நல்ல வேரவேர்ப்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வேலைக்காரன் படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகும் தேதி இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது.
பத்திரிகையாளர் கவுரி படுகொலையை பிரதமர் கண்டிக்காமல் இருப்பது நியாயமல்ல என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னதற்காக அவரை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி சமூகவலைத் தளங்களில் தொடர்ந்து பதிவுகளைப் போட்டிருக்கிறார் சிம்ஹா. எழுப்பப்பட்ட நியாமான விமர்சனத்திற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் விமர்சித்தவரை தரக்குறைவாகத் தாக்கியிருக்கிறார் மைசூரின் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா.அக்கட்சி எம் பி யின் யோக்யதையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஊகித்துக் கொள்ளலாம். அதற்காக பிரகாஷ் ராஜ் பயந்து பின்வாங்கவில்லை. […]
காவி வேஷத்தில் மாநிலத்திற்கு ஒரு மதகுரு பெண்களுடன் சரசமாடுவதை ஏன் கண்டு கொதிக்கவில்லை?ஒருவேளை அதை வீடியோவில் பார்த்து ரகசியமாக ரசிக்கிறீர்களோ?இன்று நித்தியானந்தா நடிகையுடன் சரசமாடியது உண்மையான வீடியோ என உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது.எங்கே போனது உங்கள் காவி மானம்,ரோஷம் எல்லாம்? மத வேறுபாடுகளைத் தாண்டிய மக்கள் நல்லிணக்கக் கருத்தை ஒரு புதிய வடிவில் கூறிய இந்தித் திரைப்படமாகிய ‘பி.கே.’ முதல், ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த தமிழ்த் திரைப்படமான ‘மெர்சல்’ வரையில் மதவெறி சக்திகளின் […]
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதிய படைப்பாளிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் . அதே போல் ‘6 அத்தியாயம்’ – படமும் தமிழில் ஒரு புதுவகை முயற்சி தான்.அதாவது இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் 6 இயக்குனர்களின் 6 குறும்படங்கள் இணைந்து ஒரு திரைப்படம்.ஆனால் இதன் கதை களம் ஒன்றுதான். இயக்குனர் பாரதிராஜா இந்த படத்தை பார்த்துவிட்டு ‘இந்த மாதிரிலாம் நான் பண்ணாம விட்டுட்டேனேய்யா’ னு ஃபீல் பண்ணி பாராட்டியுள்ளாராம். கேபிள் பி சேகர்,சங்கர் தியாகராஜா,அஜயன் பாலா,ஸ்ரீதர்வெங்கடேஷ்,லோகேஷ் ராஜேந்திரன்,சுரேஷ் […]
இந்திய சினிமா வரலாற்றில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க்சுமிதா தற்கொலை செய்து கொண்டபோது அதிரச்சியடைந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் வேதனைப்பட்டதை விட எனது வேதனையும் துயரமும் அதிகமாகவே இருந்தது. நன்றாக ஞாபகமிருக்கிறது.தோழர் கே.சி.கே வும் நானும் இது குறித்து கவலையைப்பகிர்ந்து கொண்டது. அக்காலத்தில் எத்தனையோ கவரச்சி நடிகைகள் வலம் வந்த போதும் என்னால் சுமிதாவை கவர்ச்சி நடிகையாகப் பார்க்கத்தோணவில்லை. ஏதோ ஒரு புரியாத காரணம் சுமிதா என்னை ஆக்கிரமித்திருந்தார். எப்போதும் அவர் முகத்தில் […]
தமிழ் நடிகைகள் படத்தில் நிலைத்து நிற்க கவர்ச்சி உடையணிந்து படத்தில் அறிமுகமாவார்கள். தனக்கான மார்க்கெட் கிடைத்ததும் கவர்ச்சியாக உடை அணியமாட்டேன் என்று சொல்வார்கள். ஒரு சிலர் குடும்ப பெண்ணாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தாலும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை பிடிக்கின்றனர். இந்நிலையில் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா நானும் நடிகைக்கு சமமான கவர்ச்சி நடிகை தான் என ட்விட்டரில் கவர்ச்சியாக ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.