மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் தொடக்க விழா நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் துவக்க ஆட்டத்தில் மோதுகின்றன. 2 ஆண்டுகள் சூதாட்டப் புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்தடை முடிவடைந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி மீண்டும் களம் காண்கிறது. எனினும் தமிழகத்தில் நிலவும் காவிரி பிரச்னையை முன்னிட்டு ஐபிஎல் […]
இங்கிலாந்தில் 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நாட்வெஸ்ட் சீரிஸ் ஒரு நாள் தொடரின் இறுதி ஆட்டம் ஜூலை 13-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த […]
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் ஐபில் போட்டி தொடங்கி, ஐபில் கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்கும் நாள் வரையிலாக அனைத்து மைதானங்களிலும் ஏர்டெல் நிறுவனத்தின் மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப (Massive MIMO Pre-5G technology) சோதனை நடக்கவுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில், இன்றுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனத்தின், தலைமை தொழில்நுட்ப அதிகாரியான (மொபைல், […]
கடந்த 2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 ஓவர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. 51 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்,சன் ரைசர்ஸ் ஐதராபாத் , டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]
மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன. மே 27-ம் தேதி வரை நடைபெறும் இந்த […]
கடந்த 2007-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 20 ஓவர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஐபிஎல் என அழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது. 51 நாள்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்,சன் ரைசர்ஸ் ஐதராபாத் , டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு […]
தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ள சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், மீறினால் மைதானத்திற்குள் புகுந்து கலவரம் செய்து தடுப்போம் என எச்சரித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதாகக் கூறியுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்க இருப்பது மக்களின் போராட்ட மனநிலையை மாற்றி கிரிக்கெட் பக்கம் கவனத்தைத் திருப்பும் […]
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் (வயது 35), கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து (114* ரன்கள்) இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். கடந்த 19 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் […]
இந்திய அணியில் 2011ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற வீரர் ஒருவரின், மேட்ச் பிக்சிங் கும்பல் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போல ஆர்பிஎல் என்பது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் விளையாடும் டி20 கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டிகள் தொடர்பாக மேட்ச் பிக்சிங் புகார்கள் எழுந்து, 6 உள்ளூர் வீரர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ராஜஸ்தான் போலீசாரால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]
திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், ஐபிஎல் போட்டிகளை தவிர்ப்பது நல்லது என குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், ஐபிஎல் போட்டிகளை நடத்துபவர்கள், தமிழகத்தின் உணர்வுகளை மதித்து போட்டிகளை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். […]
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாத இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணி உணரும் என்று தெரிவித்தார். 11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நாளை மும்பையில் தொடங்குகிறது. வான்ஹடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் […]
காஷ்மீர் விவகாரம் குறித்து கடுமையாக ட்வீட் செய்ய பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரீடி ஆதரவும் எதிர்ப்பும் கலந்து வந்தன, கவுதம் கம்பீர் அப்ரீடி ட்வீட்டுக்கு கடுமையாகக் கிண்டல் செய்து ட்வீட் செய்தது பரபரப்பானது. இந்நிலையில் விராட் கோலியிடம் ஷாகித் அப்ரீடியின் காஷ்மீர் பற்றிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப விராட் கோலி கூறியதாவது: இந்தியராக நம் நாட்டுக்கு எது சிறந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதையே விரும்புவோம். என் ஆரவங்கள் எப்போதும் நம் நாடு பற்றியதே. எனவே இந்திய […]
ஐபிஎல் கிரிக்கெட்டில் 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ஆளுமை நிரம்பிய கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் இறங்க, 3 முறை ஐபிஎல் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் ரோஹித் தலைமையின் கீழ் சென்னைக்குச் சவால் அளிக்க நாளை வான்கடேயில் களமிறங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி ஆட்டம் உண்மையான ஆட்டம் போலவே நடைபெற சுமார் 20,000 ரசிகர்கள் குவிந்தனர்.இரு அணிகளுக்குமிடையேயான ஒருவிதமான பகைமை அறியப்பட்டதே. இதுவரை இரு அணிகளும் 22 ஆட்டங்களில் மோதியுள்ளன, […]
டெல்லி டேர்டேவில்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஐபிஎல் போட்டிகளில் இந்தாண்டு டெல்லி டேர்டேவில்ஸ் அணி பட்டம் வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி டேர்டேவில்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பாண்டிங் நேற்று செய்தியாளர்களிடம், “கெளதம் காம்பீர் தலைமையில் டேர் டெவில்ஸ் அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும். அணியின் முந்தைய நிலை குறித்து கவலையில்லை. தற்போது புதிய வீரர்களைக் கொண்ட குழு உள்ளது. வீரர்கள் அனைவரும் நன்றாக தயார்படுத்திக் கொண்டுள்ளனர். களத்தில் திட்டங்களை செயல்படுத்தினால் […]
வாட்ஸ் அப்பில் ஐபிஎல் போட்டிகள் காவிரி விவகாரத்தால் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் வரும் நிலையில் போட்டி நடக்கட்டும், நாம் எப்படி அதை காவிரி போராட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று சிலர் யோசனைகளைப் பதிவிட்டு வருவது வைரலாகி வருகிறது. ஐபிஎல்லுக்கும் தமிழகத்துக்கும் ஏகப் பொருத்தம். இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது இலங்கை வீரர்கள் அணியில் இருந்தால் ஐபிஎல் போட்டியை நடத்தவிடமாட்டோம் என்ற பிரச்சினை உருவானது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா இதுகுறித்து கடிதமே எழுதினார். போட்டியும் வெளி மாநிலத்துக்கு […]
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் விளையாட என்னை அழைத்தால் கூட நான் விளையாமாட்டேன் என்று மீண்டும் வம்பிழுக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் முதன்முதலில் தொடங்கும் போது டெக்கான் சார்ஜர்க்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அப்ரிடி அப்போது ஐபிஎல் போட்டியை புகழ்ந்து தள்ளினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் நான் விளையாடிய அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. மிகச்சிறந்த அனுபவம். மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டித் தொடர் ஐபிஎல் […]
2014-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தது. முன்னதாக 2008-ல் அரை இறுதியில் கால்பதித்திருந்தது. இதைத் தவிர்த்து பஞ்சாப் அணி மற்ற 8 சீசன்களிலும் ஒருமுறை கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த சீசனுக்காக அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 8 சீசன்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் 120 விக்கெட்கள் கைப்பற்றினார். அணியின் துருப்பு […]
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இம்முறையும் தலைமை வகிக்கிறார். 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த போதிலும் அந்த அணி கோப்பையை வெல்வது எட்டாக் கனியாகவே உள்ளது. கடந்த சீசனில் ஒட்டுமொத்த அணியும் படுமோசமாக செயல்பட்டதால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது. பலவீனமான பந்து வீச்சால் அனைத்து ஆட்டங்களிலும் ரன்களை வாரி வழங்கியிருந்தது பெங்களூரு அணி. இம்முறை பந்து வீச்சை பலப்படுத்த அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திரா சாஹலுடன், […]
ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் […]
மும்பையில் ஐபிஎல் டி20 சீசன்-11 தொடர் நாளை தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்காக ‘ஐபிஎல் ரசிகர்கள் பூங்கா’ என்ற வசதி செய்து தரப்படுகிறது. போட்டிகள் நடக்காத நகரங்களில் உள்ள விளையாட்டு, கண்காட்சி திடல்களில் இந்த ‘ஐபிஎல் ரசிகர்கள் பூங்கா’ அமைக்கப்படுகின்றன. ஐபிஎல் ரசிகர்கள் பூங்காங்கள் இந்த ஆண்டு தமிழகத்தின் திருச்சி, கோவை, திருநெல்வேலி மற்றும் திருப்பதி, திருவனந்தபுரம் உட்பட 28 நகரங்களில் அமைக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகள் திரையிட உள்ளனர். குவாலிபயர், எலிமினேட்டர் சுற்று […]