இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்திய அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தென்னாபிரிக்கா பந்துவீச்சை […]
இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்த நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்திருந்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா 95 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. […]
இந்திய கிரிக்கெட்டுக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி செய்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 1998ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். முதல் முதலில் பீகார் அணிக்காகக் களமிறங்கிய அவர், அடுத்து இந்திய அணியில் இடம் பிடித்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பாக, ஐசிசி கோப்பைகள் அனைத்தையும் வென்ற கேப்டன் […]
இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்து தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (SA vs IND) இடையிலான T20 போட்டித் தொடரின் கடைசி போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. […]
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி வரும் 22–ம் தேதிவரை நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்தனர். அதேபோல நாடாளுமன்ற வெளியே ஒரு பெண் உட்பட இருவர் வண்ண புகை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் காங்கிரஸ், திமுக […]
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி உள்ளது. நேற்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே சுப்மன் கில் 12 […]
இன்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே சுப்மன் கில் 12 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். […]
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், முகமது ஷமி விளையாடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முகமது ஷமி ஏன் விளையாட முடியாது? Cricbuzz அறிக்கையின்படி, முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால்அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என […]
இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10 அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற […]
2023-ஆம் ஆண்டு முடிவடையும் இருக்கும் நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட முக்கியமான நிகழ்வுகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவை குறித்து பட்டியல் வெளியிடப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டில் கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில், உலகின் முன்னணி வீரர்கள் சிலரது பெயர் இடம் பெறவில்லை. […]
2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, ஹரியானா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 293 ரன்களை எடுத்தது. இதனால், 294 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணி களமிறங்கியது. ஆனால், தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் […]
ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் மற்றொரு முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஆகியோர் சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு (Tennis Hall of Fame) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமுக்கு ஆசியாவிலேயே முதல்முறையாக இந்திய வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அமெரிக்காவின் நியூபோர்ட், ரோட் தீவில் உள்ள ஹால், 1955ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. […]
நான் ஒரு இஸ்லாமியனாகவும் பெருமை கொள்கிறேன், ஒரு இந்தியாகவும் பெருமை கொள்கிறேன் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி சாதனை படைத்தார். அப்போது, இதனை கொண்டாட விதமாக முகமது ஷமி தரையில் அமர்ந்து தனது கைகளை நீட்டி பிராத்தனை (Sajdah) செய்ய சென்றதாகவும், பின் சுதாரித்துக்கொண்டு பின்வாங்கியதாகவும், சிலர் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான […]
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலககோப்பைக்கு இப்போட்டிகள் இந்திய அணிக்கு ஒரு அடித்தளமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனென்றால், டி20 அணிக்கு எம்மாதிரியான வீரர்களை தேர்வு செய்வது, இதுபோன்ற கலவை கொண்ட அணியை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். குறிப்பாக, ரோகித், கோலி உள்ளிட்ட மூத்த வீரர்கள் […]
அடுத்தாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நடைபெற உள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்மரம் காட்டி வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. அதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் […]
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் போட்டி மழையால் கை விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 2வது போட்டி நடைபெற்ற நிலையில், அப்போது இந்திய அணி பேட்டிங் முடிவில் மழை குறுக்கீட்டாதல் இரண்டாவதாக பந்து வீசிய இந்திய அணிக்கு சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்தது. அதனால், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் […]
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. முதல் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதில் நீண்ட நாள்களுக்கு பிறகு தொடக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா களமிறங்க உள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற உஸ்மான் விளையாடுவதற்கு முன்பே ஒரு சர்சையில் சிக்கியுள்ளார். […]
தென்னைப்பிரிக்கா – இந்தியா இடையேயான 2வது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் பேட்டிங்கில் இறங்கிய போது இந்திய அணி 55/3 என்ற நிலையில் இருந்தது. பின்னர் நிதானம் மற்றும் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் இரண்டு சிக்ஸர்ஸ் மற்றும் 9 பவுண்டரிகளுடன் […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள், அரையிறுதி போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து, இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றைத்தையும் அளித்தது. பலரும் இம்முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவதால் இந்தியா கண்டிப்பாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்த்தது போல, அணியும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை இழந்துவிட்டது. இந்த தோல்வி இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்கள் உடைந்தது போலவே, […]
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்து, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால், அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, அடுத்தாண்டு டி20 உலக கோப்பை ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த சூழலில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியிலும், சரியான கட்டமைப்பை உருவாக்கும் வேளையிலும் பிசிசிஐ […]