தந்தை – மகன் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் இருவருக்கு கொரோனா உறுதி. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து, நேற்று முன்தினம் சிபிஐ விசாரணை குழுவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது, மேலும் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், 1.5 ஆண்டுக்கு பின்னர், நந்தீஸ்வரரின் தலை வெளியே தெரியும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகி உள்ளது . மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில் அருள்மிகு சுவாமி ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது உள்ளது. அணையின் நீர்மட்டம், 69 அடிக்கு மேலே உயரும்போது கோவில் நந்தியின் சிலையானது மூழ்கி விடும். கடந்த ஆண்டு பிப்ரவரிமாத இறுதியில் அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை […]
ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்தின் நிலத்தகராறில் இரு தரப்பினருக்கும் தீர்ப்பு வரும்வரை நிலம் சொந்தம் இல்லை என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 1967ஆம் ஆண்டு ஜனவரியில் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு 333.30 ஏக்கர் காப்புக்காடு பகுதியில் இருந்து இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பணிகள் நடந்த பாதியில் அப்படியே நிறுத்தப்பட்டது. எனவே ஆட்சியர் மூலம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி […]
பொதுமக்களுக்கு முக கவசத்தோடு கந்தர் சஷ்டி கவசத்தையும், முருக பக்தர்கள் வழங்க காமாட்சிபுரம் ஆதினம் உத்தரவுப்பிறப்பித்துள்ளார். கோவை, காமாட்சிபுரம் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: இந்து தர்மம் காலத்தால் தொண்மையானது. அதிலும் முருக வழிபாடு என்பது மிக முக்கியமானது.மேலும் மலேசியா, இலங்கை, பர்மா மற்றும் போன்ற நாடுகளில் எல்லாம் பல கோவில்களில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் தான் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. முருகனின் சிறப்பை பல அடியார்கள், புலவர்கள் […]
குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 5-ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதனால், கொரோனா அதிகம் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 21 -ம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கொரோனா […]
முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில்நுட்ப பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய, உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கு விலக்கு அளித்து, மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வியாண்டிற்கு செல்ல அனுமதி அளித்து முதலமைச்சர் பழனிசாமி […]
சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், அம்பேத்கரை போற்றும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்படுவது .சமூக நீதி பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை.கந்த சஷ்டி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தாமதமாக கருத்து தெரிவித்து உள்ளார் .கறுப்பர் கூட்டத்திற்கும் திமுகவிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. கந்த சஷ்டி கவச விவகாரத்தில் ரஜினி, சரத்குமாரை […]
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு இன்று காவித்துண்டு அணிவித்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின், களைந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். […]
தமிழகத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் நியமனம் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆவின் பால் மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்யும் விதமாக, ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் […]
திருப்பதியில் மனைவியை தள்ளி விட்டு,கள்ளக்காதலியுடன் கணவர் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவர் அங்குள்ள மார்க்கெட்டில் தக்காளி விற்றுவருகிறார், இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெங்கடச்சலம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். மேலும் அந்த கள்ளத்தொடர்பில் உள்ள […]
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்தது. சென்னையில் 1336 பேருக்கும் விருதுநகரில் 480 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 5,210 பேர் குணமடைந்துள்ளனர். 88 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் 52,939 நோயாளிகள்சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்றிலிருந்து 5,210 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 1,36,793 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
அருப்புக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட தாய், தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு அருப்புக்கோட்டை மாவட்டம் சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன் இவருடைய மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது, மேலும் இவர்களுக்கு தீபக் என்ற ஒரு வயது ஆண்குழந்தையும் உள்ளது, திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி திடீர் என்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், மேலும் […]
தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தன்னை தனிமைப் படுத்தி கொண்டார். இதனால், தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், இன்று ஒரே நாளில் 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 75,384 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,569 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இன்று தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,92,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,210 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 1,36,793பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.இன்று மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில்அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் , வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எழுந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. தூத்துக்குடி புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழா நிகழ்வில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருகின்ற 26-ஆம் தேதி முழு முடக்கம் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி […]
மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என்று ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து ,பல […]
மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட முதுகலை மருத்துவப்படிப்பு தேர்வு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், சில பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி […]