ஆந்திரா : திருப்பதி மற்றும் கிருஷ்ணா மாவட்டம் ஆகிய இரு இடங்களில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் எம்.கொங்கரவாரிப்பள்ளி என்ற இடத்தில், பூதலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கியவர்கள் திருப்பதிக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரிய […]
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இம்மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மிசோராம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல நிறைவு பெற்றன. இதனை அடுத்து வரும் 30ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 199 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் […]
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் பக்கதர்களுக்கு புதிய கட்டுப்பாடு. திருப்பதியில் வரும் ஜனவரி 1 முதல் 11-ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது தரவேண்டும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, ஆன்மீகத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ரஜினிகாந்த் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு வந்துள்ளார். ரஜினிகாந்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார். திருமலையில் உள்ள டி.எஸ் ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய இவர், இன்று அதிகாலை மகளுடன் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை […]
ஆந்திராவில் மெர்சிடிஸ் மீது டிராக்டர் மோதியத்தில் 2 துண்டுகளாக உடைந்தது. வைரலாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள்! ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் மீது மோதியதில் டிராக்டர் இரண்டு பகுதிகளாக உடைந்தது. விபத்துக்குள்ளான கார் மற்றும் டிராக்டரின், புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களை வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், டிராக்டர் இரண்டு துண்டுகளாக உடைந்து கிடப்பதும், பென்ஸ் காரின் முன்பகுதி சேதமடைந்திருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும், டிராக்டரை ஓட்டி வந்த […]
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாளான இன்று மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும். இன்று முதல் முதல் 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். 9ம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ரூ.140.34 கோடி உண்டியல் காணிக்கை என தகவல். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கையாக ரூ.140.34 கோடி செலுத்தியுள்ளனர். திருப்பதி கோயிலில் 1.5 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, 10.85 லட்சம் தலைமுடி காணிக்கை, 47.74 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது […]
சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மற்றும் நாடு முழுவதும் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் 60 கோவில்கள் பக்தர்கள் வழிபாட்டிற்காக அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் மூடப்படும். அக்டோபர் 25 ஆம் மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25-ந்தேதி 9 மணிநேரத்துக்கு முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த பின் நேற்று திருப்பதி மலைக்கு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டனர். அதன் பிறகு, அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோஷுட் நடித்தினார்கள். இந்நிலையில், புகைப்படம் எடுத்தபோது காலணிகள் […]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். தங்கும் அறைகளுக்கு […]
திருப்பதி அருகில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் இருந்து 85 கி.மீ. வடகிழக்கில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் சுவாமி தரிசனம். கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வருகிறார்கள். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே.இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக, இலவச சுவாமி தரிசனம் நடைமுறை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, இலவச தரிசனத்திற்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கிட்டூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும், நாள்தோறும் 2,000 டோக்கன்படி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளதால், செப்டம்பர் 20 […]
திருப்பதி அருகே இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி அருகே இரு வெவ்வேறு பகுதிகளில் வெட்டி கடத்த முயற்சித்த 20 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருப்பதி சித்தூர் மாவட்டம் கொங்கனவாரிபள்ளி அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் அப்பகுதியில் இருந்து செம்மர கட்டைகளுடன் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். வனத்துறையினரை கண்டதும் […]
சேலம் வழியாக இன்று முதல் கோவை-திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களுக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் […]
கொரோனா இரண்டாம் அலை காரணமாக திருப்பதிக்கு செல்லக்கூடிய பேருந்துகள் வேலூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், பொதுமக்களின் நிலை கருதி சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேர […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் வழங்கப்படும் என அறிவிப்பு. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசன டிக்கெட்டுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வழங்கப்படும் என்று கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று டிக்கெட் பெறுபவர்கள் வரும் 4-ஆம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் கூறப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, திருமலையில் பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இலவச […]
திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிற்பகல் 1 மணிக்கு சாலை மூலமாக திருப்பதிக்கு சென்றார். நேற்று மாலை 4 மணிக்கு திருப்பதிக்கு சென்றடைந்தார். இன்று அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து காலையில் புறப்பட்ட முதல்வர் வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனையில் முதல்வர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இதற்கு முன் நேற்று காலை தமிழக பாஜக தலைவர் முருகன் திருப்பதியில் ஏழுமலையானை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தரிசனம் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள கொரோனா மருத்துவமனையின் மேல் சுவர் இடித்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒரு செவிலியர் சம்பவ இடத்திலேயே பரிதாப்பமாக உயிரிழந்துள்ள நிலையில், 2 பேருக்கு […]
திருப்பதியில் மனைவியை தள்ளி விட்டு,கள்ளக்காதலியுடன் கணவர் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவர் அங்குள்ள மார்க்கெட்டில் தக்காளி விற்றுவருகிறார், இந்நிலையில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெங்கடச்சலம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். மேலும் அந்த கள்ளத்தொடர்பில் உள்ள […]