உலகம்

புளோரிடாவில் பூங்கா மீது மோதி சிறிய ரக விமானம் விபத்து!

புளோரிடாவின் கிளியர் வாட்டர் நகர் உள்ள ஒரு மொபைல் ஹோம் பூங்கா மீது ஒரு சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு வீடு இடிந்து நாசமானது மேலும் மூன்று வீடுகள் தீயினால் சேதமடைந்தன. இந்த விபத்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. ஆனால், விபத்தில் விமானத்தில் இருந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்தார்களா? இல்லையா? என்று […]

Florida 3 Min Read
Florida plane crash

அடுத்தடுத்து சிறை தண்டனை.! இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள்.! 

கடந்த 2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக்கப்பட்ட இம்ரான் கான், தற்போது ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் . இந்த வேளையில், அவர் பிரதமர் பதவி வகித்த நேரத்தில் பதியப்பட்ட 2 வழக்குகளில் நேற்றும் இன்றும் அடுத்தடுத்து சிறை தண்டனை தீர்ப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.? சர்வதேச சதி : நேற்று, அரசு ரகசியங்களை […]

#Pakistan 6 Min Read
Pakistan Ex PM Imran khan

மலேசியாவின் புதிய மன்னரானார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம்!

மலேசியாவின் 17வது புதிய மாமன்னராக ஜோகூர் மாநிலத்தின் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் பதவியேற்றார். மாமன்னரின் முடிசூட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் மலேசியா நாட்டின் புதிய மன்னராகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த முடிசூட்டு விழாவில் மாநில மன்னர்கள், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், துணைப் பிரதமர்கள் அகமது ஸாஹிட் ஹமிடி மற்றும் ஃபடில்லா யூசோப், அரசாங்க அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதன்படி, […]

Johor state 4 Min Read
Sultan Ibrahim Sultan Iskandar

உலக ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசை பட்டியல்.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

உலக நாடுகளின் ஊழல் விகிதத்தை பொறுத்து மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசை படடியலை (2023 Corruption Perceptions Index (CPI)) சர்வதேச அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  அதில் ஊழல் இல்லாத நாட்டின் அதிகபட்ச மதிப்பெண் 100 என கணக்கிடப்பட்டுள்ளது. எந்த நாடு அதிக மதிப்பெண் எடுத்துள்ளதோ அது முதலிடம் பிடிக்கும். மொத்தம் 180 நாடுகள் இந்த தரவரிசை பட்டியலில் கணக்கிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..! ஊழல் தரவரிசையில் 100க்கு […]

#CPI 5 Min Read
Most Corruption Countries - CPI Ranking

பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேளுங்கள்.. எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்..!

கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் தொடர்பாக மாலத்தீவு அதிபா் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 3 அமைச்சா்கள் சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை பற்றியும் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு […]

#PMModi 6 Min Read
Mohamed Muizzu

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது, அரசு ரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாஃப் கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் இம்ரான் […]

#Pakistan 6 Min Read
Imran Khan

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்பு.!

அமெரிக்காவில் டிப்பேகானோ கவுண்டியில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் கணினி மென்பொருள் படிப்பை பயின்று வந்துள்ளார் இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா. இவர் கடந்த ஞாயிற்று கிழமை முதல் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து அவரது தயார் கௌரி ஆச்சார்யா , தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில் , ”  எங்கள் மகன் நீல் ஆச்சார்யா ஜனவரி 28ஆம் தேதி முதல் காணவில்லை, அவர் அமெரிக்காவில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரை கடைசியாக தனியார் […]

#USA 5 Min Read
Indian student Neel Acharya died in USA

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை இழந்த எலான் மஸ்க்..!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். அதன்படி, பெர்னார்ட் அர்னால்ட், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார். ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான Louis Vuitton (LVMH) சி.இ.ஓ பெர்னார்ட் அர்னால்ட் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்கை முந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பிரான்ஸைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் எலான் மஸ்கை முந்தி […]

Elon Musk 4 Min Read

1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், 1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கேமிங் பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்கின்றனர். தொழில்நுட்பத் துறையானது கடினமான பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று போன்றவை காரணமாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. இதன் விளைவாக 2023 இல் அதிகரித்த பணிநீக்கம் இந்தாண்டும் தொடர்கிறது. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் […]

Layoffs 3 Min Read

கடத்தப்பட்ட ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை..!

சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் என்ற மீன்பிடி கப்பலை  இந்திய கடற்படையின்  போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா வெற்றிகரமாக மீட்டுள்ளது. ஈரான் நாட்டுக் கொடியுடன் மீன்பிடிக் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்தது. உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய கடற்படையின்  போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா சம்பவ இடத்திற்கு சென்றது. அங்கு இருந்த கொள்ளையர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சோமாலியாவை நோக்கிச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஐஎன்எஸ் […]

#IndianNavy 5 Min Read
INSSumitra

அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல்…மறுப்பு தெரிவித்த ஈரான்..!

ஜோர்டானில் சிரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸா போர் தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் காயமடைந்ததற்கும் அமெரிக்கா […]

drone attack 5 Min Read
Iran

ரஸ்யா தாக்குதல்…  மூன்றாம் உலகப்போர்… உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்.!

கடந்த பிப்ரவரி 2022ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலானது சுமார் இரண்டு வருடங்கள் நெருங்கியும் இன்னும் ஒரு சில இடங்களில் தாக்குதல் தொடர்பான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த போர் பதற்றம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.! சர்வதேச அளவில் 3ஆம் உலகப்போர் வர வாய்ப்புள்ளது. ரஸ்யா, நோட்டோ […]

#Russia 4 Min Read
Ukraine President Volodymyr Zelensky

அக்டோபர் 7 தாக்குதலில் ‘பாலஸ்தீன ஐநா’ அதிகாரிகளுக்கு தொடர்பு.? இஸ்ரேல் கடும் குற்றசாட்டு.!

கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹாமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் என இஸ்ரேலிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது  சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர்.  அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஹமாஸ் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் […]

#UN 6 Min Read
UNRWA - Israel

வணிகக் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்… உதவி செய்த இந்தியா..!

செங்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகள் உட்பட இப்பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது ஆளில்லா விமானம் மற்றும் கடற்கொள்ளையர்களின் தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சில கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியாக போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளன. மேலும் ஹூதி படைகளுக்கு எதிராக ஏமன் முழுவதும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் அவ்வப்போது பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஓசியோனிக்ஸ் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மார்லின் லுவாண்டா […]

Houthi 5 Min Read
MarlinLuanda

பெண் மீது அத்துமீறல்… இந்திய வம்சாவளி நபருக்கு சிங்கப்பூரில் சிறை தண்டனை.!

இந்திய வம்சாவளியினரான சிங்காரம் பலியநேப்பன் எனும் 61வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்காரம் பலியநேப்பன் (வயது 61) சிங்கப்பூரில் நீண்ட வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் பணிப்பெண் ஒருவரை லிப்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் , ஒரு சைக்கிள் கடையில் இருந்த நபரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ரூ. […]

Indian origin 5 Min Read
indian Origin Singaram Palianeapan arrest in singapore

டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.680 […]

Donald Trump 4 Min Read
donald trump

இந்தியாவிடம் அரசியல் விளையாட்டு எடுபடாது – ரஷ்ய அதிபர்

இந்தியாவும், பிரதமர் மோடியும்  தங்களின் தேச நலனை கருத்தில் கொண்டு சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றுகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார். ‘ரஷ்ய மாணவர் தினத்தை’ முன்னிட்டு கலினின்கிராட் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசிய அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், உலகின் பொருளாதார வளர்ச்சியின் மிக உயர்ந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதுவும், தற்போதைய பிரதமரின் தலைமையே அதற்கு காரணமாகும். பிரதமர் மோடியின் தலைமையின் போதுதான் இந்தியா இத்தகைய வேகமாக வளர்ச்சியை […]

#BJP 6 Min Read
Vladimir Putin

விளையாட்டாய் பேசிய ‘தலிபான் ஜோக்’.! ஸ்பெயின் நாட்டு விசாரணையில் சிக்கிய இந்திய வம்சாவளி மாணவர்.!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆதித்ய வர்மா எனும் 18 வயது மாணவர் லண்டனியில் பாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த 2022 ஜூலை மாதம் லண்டன் கேட்விச் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மெனோர்கா தீவுக்கு சென்றார். ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..! அப்போது விளையாட்டாக தனது  ஸ்னாப்சாட்  கணக்கில் இருந்து, தான் தாலிபான் உறுப்பினர் என்றும், விமானத்தை வெடிக்க செய்ய உள்ளேன் என்றும் தனது […]

#UK 5 Min Read
Aditya Verma

சாதித்த ஜப்பான்.! நிலவில் தரையிறங்கிய 5வது நாடு.! புகைப்படம் இதோ…

நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய 5வது நாடாக பெருமை கொண்டுள்ளது ஜப்பான். ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) கடந்த வருடம் செப்டம்பரில் ஸ்லிம் எனும் Smart Lander for Investigating Moon எனும் விண்கலத்தை நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக விண்ணில் ஏவியது.  அதற்கு முன்னர் 3 முறை இந்த விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. உக்ரைன் போர்க் கைதிகள் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் விபத்து..! விண்ணில் ஏவப்பட்ட ஸ்லிம் (SLIM) விண்கலம் […]

Japan Slim Aircraft 5 Min Read
Japan SLIM Spacecraft

ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!

உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான […]

#RussiaUkrainewar 5 Min Read
military plane