புளோரிடாவின் கிளியர் வாட்டர் நகர் உள்ள ஒரு மொபைல் ஹோம் பூங்கா மீது ஒரு சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஒரு வீடு இடிந்து நாசமானது மேலும் மூன்று வீடுகள் தீயினால் சேதமடைந்தன. இந்த விபத்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. ஆனால், விபத்தில் விமானத்தில் இருந்தவர்களும் வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்தார்களா? இல்லையா? என்று அறிவிக்கப்படவில்லை.
கொடநாடு விவகாரம் – குஜராத் தடயவியல் நிபுணர்கள் வருகை…!
தற்போது இந்த விபத்து எதனால் நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை எக்ஸ் தள பக்கத்தில், வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் விபத்து நடந்த இடத்தின் காட்சிகள், வீட்டில் மோதியபடி விமானத்தின் தீ மற்றும் புகையுடன் கூடிய கோர காட்களை காட்டுகிறது.
unknown node