ரூ.45 ஆயிரத்தில் முழு நீள தமிழ் திரைப்படத்தை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்!

Published by
லீனா

இன்றைய நிலையில், ஒரு படம் இயக்குவதற்கு பல நூறு கோடிகள் செலவாகிறது. இந்த நிலையில், ஒரு இளைஞர் 45 ஆயிரம் செலவில், 1 மணி நேரம் 40 நிமிடம் ஓடக் கூடிய தமிழ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். புதுமுகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை, ரத்தினகுமார் என்ற புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் பெயர், ‘surveillance zone’. வெறும் ரூ.45 ஆயிரம் செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் சுயாதீன தமிழ்ப்படம் ஆகும். இத்திரைப்படம் ஆகஸ்ட் 16-ம் தேதி டொராண்டோவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் இப்படம் இத்தாலி, பெர்லின், இஸ்ரேல், மியாமி, கொல்கத்தா போன்ற ஊர்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில், ஒரு கதையை CCTV footage மூலம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இப்படமும் இருக்கும். மேலும் இப்படத்தில் இசை இல்லை. cctv-ல் பதிவு செய்யப்பட்ட ஆடியோ எப்படி கேட்குமோ அதே போல் தான் இதற்கு ஒளி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படம் Canon 550D மற்றும் Gopro கேமராவில் எடுக்கப்பட்டது.

மேலும், இப்படத்திற்கு டில்லியில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival-ல் இப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு! 

பாக். ராணுவம் பதில் தாக்குதல்., இந்திய எல்லைக்குள் 13 பேர் உயிரிழப்பு!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…

15 minutes ago

“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…

53 minutes ago

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

9 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

10 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

11 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

12 hours ago