Bonda Mani [File Image]
பிரபல நகைச்சுவை தமிழ் நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. தற்பொழுது, போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கையை பூர்வீகமாகக் இவர் , பாக்யராஜ் இயக்கத்தில் 1991-ல் வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர், முத்து, முறை மாப்பிள்ளை, திருமலை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.. இவர் வடிவேலு உடன் இணைந்து நடித்திருந்த காமெடி காட்சிகளை எல்லாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே கூறலாம். கடைசியாக இவர் நடித்த “வா வரலாம் வா” என்ற படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது.
குறிப்பாக இவர் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்த ‘ஆறு’ படத்தின் காமெடி காட்சிகள் மற்றும் ‘கண்ணும் கண்ணும்’ திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த அடிச்சு கேட்டாலும் யாருகிட்டயும் சொல்லாதீங்க காமெடி காட்சிகள் எல்லாம் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படி பல காமெடி காட்சிகளில் நடித்து நம்மளை சிரிக்க வைத்த போண்டாமணி “எங்க வீட்டு மீனாட்சி” என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.
இவருக்கு கடந்து ஆண்டு 2 சிறுநீரகங்களும் செயலிழந்ததால், சிகிச்சைப் பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் நிதி பற்றாக்குறை காரணமாக, பணம் கேட்டு கண்ணீருடன் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாயினது. இதனை அடுத்து அவருக்குஅவருக்கு தனுஷ், விஜய்சேதுபதி, வடிவேலு, பார்த்திபன், மயில்சாமி உட்பட பல சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்தனர்.
நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்!
அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நேரில் சென்று நலம் விசாரித்ததுடன், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த போண்டா மணி நேற்று இரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இவரது மறைவு இயற்கையான மரணம் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவிக்கப்பட்டாலும், சந்தேகத்தின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இப்போது, மறைந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வுகள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது என்றும், குரோம்பேட்டை நாகல்கேணி மின் தகனமேடையில் உடல் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…