“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!
பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி ஆவேசக் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பணிவு மற்றும் நாகரிகமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அவர் தனது பேச்சில், மும்பை தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்ளுங்கள். பஹல்காம் தாக்குதலுக்கு யார் பொறுப்பு? காங்கிரசை விட பாஜக தான் நேருவை அதிகம் நினைவு வைத்திருக்கிறது.
தேசத்தை நாங்கள் எந்நாளும் விட்டுக் கொடுத்ததில்லை, எதிர்க்கட்சிகளுக்கு தேசபக்தி இல்லை என்பது போல் இருந்தது அமித்ஷாவின் பேச்சு. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக முதலில் பேரணி நடத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று 26 முறை கூறிவிட்டார் டிரம்ப். அவரின் கருத்தை நேரடியாக மறுக்காதது ஏன்? இதுதான் உங்களது வெளியுறவுக் கொள்கையா? என்று கடுமையாக சாடியுள்ளார்.