காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. அதற்கு யார் பொறுப்பு? மக்களவையில் பிரியங்கா சரமாரி கேள்வி எழுப்பினார்.

Priyanka Gandhi -Operation Sindoor

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ”பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது. பயங்கரவாத தாக்குதல்களில் மக்கள் மட்டுமல்ல வீரர்களும் மரணம். 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு கூறியதை நம்பி சுற்றுலா பயணிகள் சென்றனர். காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்ததாக மத்திய அரசு கூறியதை நம்பிச் சென்றவர்கள் கொல்லப்பட்டனர். பஹல்காமில் ஒரு மணி நேரமாக தாக்குதல் நடந்தது, அப்போது ஒரு வீரர் கூட அங்கு இல்லை.

அதற்கு யார் பொறுப்பு? பகல்ஹாமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி குறித்து பேசும் ஒன்றிய அரசு, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பேச மறுப்பது ஏன்?  டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பை கண்காணிப்பதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துவிட்டது.

உளவுத்துறை தோல்வியால் யாராவது ராஜினாமா செய்தார்களா? காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல் நடந்தபொழுது உள்துறை அமைச்சர் உடனே பதவி விலகினார். பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், உளவுத்துறை தலைவர் ராஜினாமா செய்வார்களா? எனக் காட்டமாக பேசியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்