நகைசுவை நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டும் தனது கவனத்தை செலுத்தாமல், சமூகத்தின் மீதும், இயற்கை வளங்களின் மீது அக்கறை கொண்டவராக செயல்பட்டு வருகிறார்.
நடிகர் விவேக்கை பொறுத்தவரையில், மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி, மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை பாராட்டும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சென்னை மாநகராட்சிக்கு நன்றியும் பாராட்டுக்களும். இருக்கும் அரசு மரங்களை பாதுகாப்பதற்கும் இனி புதிதாக மரம் நடுவதற்கும் வாழ்த்துக்கள். மாநகராட்சி கமிஷனர் திரு.G.பிரகாஷ் IAS அவர்களுக்கு என் இதய பூர்வ நன்றி’ என பதிவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…