தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் முழுசம்பளம் வழங்கிய நடிகர் விஷ்ணு விஷால்.
நடிகர் விஷ்ணு விஷால் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிற நிலையில், இந்த மூன்று படத்தையும் அவரே தயாரிக்கிறார். இவர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் எப்.ஐ.ஆர்., முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன்தாஸ், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டைரக்டர் செல்லா இயக்கும் படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, ஊரடங்கு உத்தரவால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணு விஷால், தனது மூன்று படங்களிலும் பணிபுரியும் அனைவருக்கும் தொடர்ந்து முழு சம்பளம் கொடுத்து வருகிறார். 3 படங்களில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்கள், புரொடக்ஷன் துறையை சேர்ந்தவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் கொடுத்திருக்கிறார். இவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…