sanjana natarajan [File Image]
நோட்டா , கேம் ஓவர் மற்றும் சர்ப்பட்ட பரம்பரை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். இவர் தனுஷிற்கு ஜோடியாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். ஆனால், படம் முழுவதுமாக அவர் ஹீரோயினாக நடித்திருக்கமாட்டார். அவருடைய காட்சி கொஞ்சம் தான் வரும். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கூட பழங்குடிப் பெண்ணாக நடித்திருப்பார்.
படம் பெரிய அளவில் வெற்றியை பெற்று அவருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சஞ்சனா நடராஜன் தனக்கு ஹீரோயினாக ஒரு முழு திரைப்படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும், அது தான் தன்னுடைய அடுத்த இலக்கு என மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய நடிகை சஞ்சனா நடராஜன் ” நான் தற்போது தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறேன். ஒரு படத்தில் போலீஸ் அதிகாரி மற்றோரு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என தொடர்ச்சியாக நடிக்க கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், என்னுடைய ஆசை மற்றும் இலக்கு என்றால் ஒரு படத்தில் முழுவதுமாக கதாநாயகியாக நடிக்கவேண்டும் என்பது தான்.
கீர்த்தி சுரேஷிற்காக கணவனிடம் வாய்ப்பு கேட்ட அட்லீ மனைவி! தோழி மீது ரொம்ப பாசம் தான்!
அப்படி ஒரு பட வாய்ப்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என சற்று எமோஷனலாக சஞ்சனா நடராஜன் பேசியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் பொதுவாகவே வேண்டுமென்றே ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆகமாட்டேன். ஒரு படத்தின் கதையை கேட்பேன் அந்த கதையில் நான் நடிக்கவுள்ள கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் இருக்கு என்பதையும் பார்ப்பேன்.
இதுவரை நான் தேர்வு செய்து நடித்த படங்கள் எல்லாம் அப்படி தான். அதைப்போல இனிமேல் நடிக்க போகும் படங்களும் அப்படி தான் இருக்கும் ‘எனவும் நடிகை சஞ்சனா நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை சஞ்சனா நடராஜன் தற்போது மலையாளத்தில் ‘டிக்கி டாக்கா’ என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…