தொடர்ந்து படங்கள் தோல்வி! ‘அரண்மனை 4 ‘நம்பி காத்திருக்கும் சுந்தர் சி?

Published by
பால முருகன்

Aranmanai 4 : தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அவர் அரண்மனை 4 படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் காமெடியான கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனர் சுந்தர் சி. இவர் கடைசியாக இயக்கிய காபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை போல அதற்கு முன்னதாக இயக்கிய அரண்மனை 3 படமும் ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அரண்மனை 1, 2, ஆகிய பாகங்கள் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது.

இருப்பினும்  அரண்மனை 3 படம் தோல்வியை சந்தித்தது அவருக்கே பெரிய சோகத்தை கொடுத்தது. தோல்வியால் துவண்டு விடாமல் அடுத்ததாக மக்களை மகிழ்விக்க அவர் அரண்மனை 4 படத்தையும் இயக்கி உள்ளார். இந்த 4-வது பாகத்தில் சந்தோஷ் பிரதாப், தமன்னா பாட்டியா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து பாடத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அரண்மனை 4 படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Aranmanai4 is coming this April 2024 [File Image]
அதன்படி, அரண்மனை 4 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இயக்கிய கடைசி இரண்டு திரைப்படங்கள் சரியாக போகாத நிலையில், கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்கவேண்டு என்ற எண்ணத்தோடு சுந்தர் சி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அரண்மனை 4 டிரைலர் அப்டேட் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

30 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

3 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

3 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

4 hours ago