ajith fan ghilli banner [file image]
Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சினிமாத்துறையில் அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒன்றாக வெளியானால் போதும் யாருடைய படம் அதிகம் வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துவிடும். இதனாலே சமூக வலைத்தளங்களில் தங்களுக்கு பிடித்த நடிகர் தான் மாஸ் என அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி சண்டைபோட்டு கொண்டு வருகிறார்கள். அஜித் விஜய் இருவரும் ஒற்றுமையாக இருந்தால் கூட அவருடைய ரசிகர்கள் தான் இன்னும் சண்டைபோட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், நேற்று நடிகர் அஜிதிக்குமாரின் 53-வது பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் பேனர் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த தீனா, பில்லா ஆகிய படங்கள் திரையரங்கில் ரீ -ரிலீஸும் செய்யப்பட்டது. ரசிகர்கள் திரையரங்கிற்குள்ளே வெடிவெடித்து கொண்டாடினார்கள்.
காசி திரையரங்கில் தீனா படத்தின் ரீ -ரிலீஸ் போது அங்கு கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பேனர் ஒன்று இருந்தது. அந்த பேனரை பார்த்த அஜித் ரசிகர் ஒருவர் விறுவிறுவென மேலே ஏறி கையில் வைத்து இருந்த பைக் சாவியை வைத்து அஜித்தின் பேனரை கிழித்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதனை பார்த்த பலரும் இது ரொம்பவே மோசமான செயல் என்று தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனையடுத்து, பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் என்னுடைய நண்பர்களுடன் தீனா படத்தை பார்க்க சென்றேன். படத்தை பார்த்து நண்பர்களுடன் கொண்டாடிய ஆர்வத்தில் அண்ணன் விஜய் உடைய பேனரை தெரியாமல் கிழித்துவிட்டேன். இது தப்பு தான் இதற்காக தமிழக வெற்றிக் கழகம் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி செய்த காரணத்தால் தலைவணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அந்த ரசிகர் தனது மன்னிப்பை கேட்டுக்கொண்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…