வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் தான் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இதனை போனிகபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
முதல் காட்சியே பேங்கில் வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்தில் ஒரு மெசேஜ் இருந்தது போல இந்த படத்திலும் ஒரு வலுவான மெஜேச் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல் அவ்வப்போது பரவி வருவது வழக்கம் தான். அந்த வகையில், தற்போது இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் பரவி வருகிறது.
அது என்னவென்றால், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த தகவல் உறுதியானால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரகுல் பிரீத் சிங் ஏற்க்னவே இயக்குனர் எச் .வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…