RIP vijayakanth [File Image]
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
விஜயகாந்தின் மறைவுச் செய்தி அறிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார். அதைப்போல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நடிகர்கள் விக்ரம், கமல்ஹாசன், அருண் விஜய், இசையமைப்பாளர் அனிருத், நடிகைகள் ரேகா, குஷ்பு, நமீதா உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இரங்கல்!
இந்த நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நாளை (டிசம்பர் 29) ஆம் தேதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, விஜயகாந்தின் இறுதி பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, நாளை தமிழகத்தில் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாது. மேலும், விஜயகாந்தின் இறுதிச்சடங்கு நாளை முழு அரசு மரியாதை உடன் நடைபெறுகிறது. விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்க தமிழக அரசு உத்தரவு கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…