animal box office [File Image]
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.660 கோடி வசூல் செய்துள்ளது.
படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. 8 நாட்களில் ரூ.600 கோடியை கடந்து தற்போது ரூ.1000 கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
10 நாளில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.400 கோடியைத் தாண்டியது. மேலும் உலகம் முழுவதும் ரூ.650 கோடியை கடந்தது. விடுமுறை நாட்கள் இல்லாமலும், வேலை நாட்களில் இப்படி ஒரு அபார சாதனை நிகழ்த்தி பாலிவுட் சினிமாவை அலற வைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ரூ.600 கோடி வசூல் செய்து ‘அனிமல்’ திரைப்படம் சாதனை.!
அநேகமாக, ஷாருக்கான் நடிப்பில் உருவான ‘டுங்கி’ திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வரை டிக்கெட் கவுன்டர்களில் ‘அனிமல்’ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்பது போல் தெரிகிறது. ரூ.1000 கோடியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் 1000 கோடியை தொடும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஒரே வாரத்தில் ஹிந்தி சினிமாவை அலற வைத்த ரன்பிர் கபூர்.! உலகளவில் எத்தனை கோடி தெரியுமா?
இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…