தி லெஜெண்ட் பாடலை வெளியிட்ட லெஜெண்ட்ஸ்.! சூப்பர் ட்ரெண்டிங்கில் வருகிறார் அண்ணாச்சி.!

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, “தி லெஜெண்ட்” என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். படத்தில் அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார்.
இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, தற்போது பாடல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த பாடலை லெஜெண்ட் இயக்குனர்களான மணிரத்தனம், எஸ்எஸ் ராஜமௌலி, சுகுமார் ஆகிய மூன்று இயக்குனர்களும் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பா.விஜய் எழுத அர்மான் மாலிக் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025