Categories: சினிமா

அயலான் 2 அப்டேட்! VFX காட்சிகளுக்கு மட்டும் 50 கோடியா?

Published by
பால முருகன்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் திரைப்படம் அயலான். இந்த  படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்போது அயலான் படத்தை தயாரித்த பாண்டம் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அயலான் 2 குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. “அயலான்” படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர்களை KJR ஸ்டுடியோவில் மீண்டும் இணைக்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் ஜீவன் செம ஸ்மார்ட்! புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

“அயலான் 2″க்கான தயாரிப்பு தயாராகி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் படைப்பாற்றல், ரவிக்குமாரின் இயக்குனர் நுணுக்கம் மற்றும் PhantomFX இலிருந்து அற்புதமான VFX & CGI ஆகியவற்றைக் கலக்கும் ஒரு அசாதாரண காட்சியை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

“அயலான் 2′ படத்தின் ஒத்துழைப்பு இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. அயலான்’ படத்தின் வெற்றி களம் அமைத்துள்ளதால், அதன் தொடர்ச்சியின் மூலம் அதை மேலும் உயர்த்துவதில் உறுதியாக உள்ளோம். கண்டிப்பாக அயலான் 2 வரும்” எனவும் அறிவித்துள்ளார்கள்.

அயலான் 2 படம் குறித்து கூடுதல் தகவல் என்னவென்றால், அயலான் படத்தின் VFX காட்சிகளுக்காக மட்டுமே படக்குழு 50 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தையும் கைவசம் வைத்துள்ளார். எனவே, தான் கமிட் ஆகி இருக்கும் படங்களை எல்லாம் முடித்த பிறகு அயலான் 2 படத்தில் நடிக்க கமிட் ஆவார் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

24 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago