த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் விழாவில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

TVKMaanadu MADURAI

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மதுரை கூடக்கோவில் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான முதல் கட்டமாக, பந்தல்கால் நடும் விழா ஜூலை 16, 2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தவெகவின் பொதுச்செயலாளர் திரு. என். ஆனந்த் கலந்துகொண்டு, பூமி பூஜை செய்து மாநாட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.இந்த மாநாடு தவெகவின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல் எனக் கருதப்படுகிறது.

கட்சியின் முதல் மாநாடு 2024 அக்டோபர் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தவெகவின் தலைவர் விஜய், கட்சியின் கொள்கைகளையும், மக்களுக்கான திட்டங்களையும் விளக்கியிருந்தார். இந்த இரண்டாவது மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக பரந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 300 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் மாநாட்டு திடல், ஆயிரக்கணக்கான தொண்டர்களையும், மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் தயாராகி வருகிறது. பந்தல்கால் நடும் விழாவில், தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, மாநாட்டின் வெற்றிக்காக உறுதி ஏற்றனர்.

இந்த மாநாட்டில், தவெகவின் எதிர்கால திட்டங்கள், மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் 2026 தேர்தலுக்கான உத்திகள் குறித்து விரிவாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யின் பங்கேற்பு மற்றும் அவரது உரை, மாநாட்டின் முக்கிய அம்சமாக இருக்கும். விரைவில் என்ன தேதியில் மாநாடு நடக்கும் என்பதற்கான விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்