Pichaikkaran2 [Image Source : Twitter/@vijayantony ]
பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் 2
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன்-2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
டிரைலர்
இந்த திரைப்படத்திற்கான டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால் ட்ரைலர் தற்போது தாமதமாக வெளியிடபட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.
படத்தின் டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. டிரைலரை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாகவும், படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளதாகவும் , வேற லெவல் சம்பம் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மே 11 ரிலீஸ்
பிச்சைக்காரன் 2 திரைப்படம் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனால் படம் வெளியாகாமல் இருந்தது. இதனையடுத்து ஒரு வழியாக திரைப்படம் வரும் மே மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…