வெங்கட் பிரபு மூலம் மீண்டும் வில்லனாக அவதாரம் எடுக்கும் அருண் விஜய்.!

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளார். அந்த படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, அந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அருண், விஜய் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருப்பார்.
அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அவருக்கு மார்க்கெட் அதிகமானது. அதைபோல் தற்போது தெலுங்கிலும் வலுவான ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமாகலாம் என திட்டமிட்டுள்ளாராம்.
மேலும், அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள யானை திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025