Categories: சினிமா

பார்த்தாலே பிடிக்கல! அந்த நடிகர் கூட நடிக்க நோ சொன்ன சில்க் ஸ்மிதா?

Published by
பால முருகன்

Silk Smitha : சத்யராஜை பார்த்தாலே பிடிக்கவில்லை என அவருடன்  நடிக்க நடிகை சில்க் ஸ்மிதா அந்த சமயம் மறுத்துள்ளார்.

80,90 ஆகிய காலகட்டத்தில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வளம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. கவர்ச்சியான காட்சிகள் என்றாலும் சரி கவர்ச்சியான பாடல்களில் நடனம் ஆடுவது என்றாலும் சரி அந்த சமயம் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருந்தார். சிவாஜியில் இருந்து, ரஜினி, கமல் என பல பெரிய நடிகர்கள் படத்தில் நடித்து அந்த சமயம் எல்லாம் ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு சம்பளம் வாங்கினார்.

அப்படி முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த சமயத்தில் சில்க் ஸ்மிதா பிரபல நடிகர் ஒருவருடன் நடிக்கவே மறுத்தாராம். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை எந்த காதாபாத்திரங்கள் கொடுத்தாலும் தனது அசாத்தியமான நடிப்பால் அசர வைக்கும் சத்யராஜ் தான். சத்தியராஜ் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பே சில்க் ஸ்மிதா சினிமாவில் கலக்கி கொண்டு இருந்தார்.

எனவே, அந்த சமயத்தில் தான் சில்க் ஸ்மிதாவுக்கு சத்யராஜ் உடன் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அப்போது சத்யராஜை பார்த்தவுடனே சில்க் ஸ்மிதா நான் இவருடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறினாராம். என்னை விட ரொம்பவே அவர் உயரமாக இருக்கிறார் அவருடன் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை சுத்தமாக அவரை எனக்கு பிடிக்கவே இல்லை என்று கூறி மறுத்தாராம். பிறகு இயக்குனர் தயாரிப்பாளர் அவர் இப்போது தான் வளர்ந்து வருகிறார்.

அவர் ரொம்பவே வசதியான குடும்பத்தில் இருந்து சினிமாத்துறைக்குள் வருகிறார் அவருடன் நீங்க நடித்தால் என்ன அவரை பார்க்க பாவமாக இருக்கிறது என்று கூறி சில்க் ஸ்மிதாவை படத்தில் நடிக்க சொன்னார்களாம். இவ்வளவு தூரம் அவர்கள் சொல்கிறார்கள் என்று தான் சில்க் ஸ்மிதா சத்யராஜுடன் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம். ஒப்புக்கொண்ட அந்த படத்தில் நடித்த பிறகு சத்தியராஜ் உடன் நடிக்க சில்க் ஸ்மிதா அடுத்தடுத்த படங்களில் சம்மதம் தெரிவித்தாராம்.

இந்த தகவலை பத்திரிகையாளர் ஜோசப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், சில்க் ஸ்மிதா  சத்தியராஜ் இருவரும் ஜீவா, தோழர் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்கள் . இந்த படங்களும் அந்த சமயம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago