தீபாவளி இல்ல…பொங்கலுக்கு தான் ரிலீஸ்! ‘அயலான்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பு நிறுவனம் கேஜிஆர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
எலியன் உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் முன்னதாக, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், அந்த ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டது.
இந்நிலையில், குழப்பத்திற்கு மத்தியில், ‘அயலான்’ திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகிறது என ஒரு புதிய போஸ்டரை பகிர்ந்துகொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அயலான் படக்குழு. இப்படத்தின் CGI வேலைக்காக அயராமல் உழைத்து வந்த படக்குழு தீபாவளி ரிலீஸ் தேதியை வேண்டாம் முடிவு செய்து பக்கா பிளான் போட்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறது.
#AyalaanFromPongal #AyalaanFromSankranti ????????#Ayalaan ???? pic.twitter.com/bbyf0PAoHP
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2023
மேலும், அக்டோபர் மாதம் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்த படம் ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.