‘காவாலா’ பாடலுக்கு மேடையை அலறவிட்ட பீஸ்ட் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ!

Shine Tom Chacko dance

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ‘காவாலா’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல மலையாள ஷைன் டாம் சாக்கோ நடிக்கும் ‘தெறி மேரி’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஹனி ரோஸ் நடிக்கும் இந்த திரைப்படம் 2024 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், ‘தெறி மேரி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடலுக்கு தனது வித்தியாசமான நடனத்தின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பாடலின் அவர் போடும் ஒவ்வொரு ஸ்டேப்பும் தனித்துவமாக ரசிக்கும்படி அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணயத்தில் வைராகி வருகிறது.

இயக்குனர் பிருத்விராஜ் சுகுமாரனின் உதவியின் இயக்குனராக இருந்து வந்த ஸ்ரீராஜ் எம் ராஜேந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். திரைக்கதையை ஆர்த்தி மிதுன் எழுத, கைலாஸ் மேனன் இசையமைக்கிறார்.

இதற்கிடையில், நடிகர் ஷைன் டாம் சாக்கோ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்துக்கு முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில், வில்லனல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் ஷைன் டாம் சாக்கோவுக்கு பீஸ்ட் படத்தில் நடித்த கதாபாத்திரத்திரம் அந்த அளவுக்கு பேசப்படவில்லை. அதன் கதாபாத்திரமும் அந்த அளவுக்கு முக்கியமானதாக கொடுக்கப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்