kushboo [file image]
Kushboo சினிமா துறையில் இருப்பவர்களை பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசுவதும் அவர்களுடைய சீக்ரெட் விஷயங்கள் என்று அவர் பேசுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், தற்போது குஷ்பூ, பிரபு, கார்த்தி ஆகியோரை பற்றி பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது குறித்து பேட்டியில் பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதன் ” நடிகர் பிரபு ஆரம்ப காலத்தில் குஷ்பூவுடன் பல படங்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் அவரை காதலித்து கொண்டு இருந்தார்.
கார்த்திக்கும் பிரபுவும் நெருங்கிய நண்பர்கள். குஷ்பூ பிரபு காதலித்து வந்த காரணத்தால் தான் கார்த்தி குஷ்பூவுடன் அதிகமான படங்களில் நடிக்கவில்லை. இருப்பினும் கார்த்தியுடன் தொடர்ந்து நடிக்காத காரணத்தை குஷ்பூவும் பல நாட்கள் கழித்து கூறியுள்ளார். நான் போகும் பியூட்டி பார்லருக்கு தான் கார்த்தியும் வருவார். அந்த சமயமே எங்களுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.
நானும் அவரும் ஒன்றாக படங்களில் நடிக்கும்போது நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். இருப்பினும் 16 வருஷம் படத்திற்கு பிறகு நான் அவருடன் படங்களில் நடிக்கவில்லை அவரும் அவர் நடிக்கும் படத்திற்கு யாரை ஹீரோயின் நடிக்க வைக்கலாம் என்று கேட்டால் கூட அவர் என்னுடைய பெயரை கூறமாட்டார். அதற்கு காரணம் எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வந்தது” என்று குஷ்பூ கூறியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அந்த சமயம் கார்த்தி குஷ்பூவுடன் நடிக்காத காரணம் மற்றொன்று இருக்கிறது. அது என்னவென்றால் கார்த்தி நெருங்கிய நண்பர் நடிகர் பிரபு குஷ்பூவை தீவிரமாக காதலித்து வந்தார் எனவே தனது நெருங்கிய நண்பரின் காதலியுடன் எதற்காக நாம் நடிக்க வேண்டும் என்று நடிக்காமல் இருந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதனால் தான் குஷ்பூவுடன் அவர் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றும்” பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…