பிக் பாஸ்-க்கு டாட்டா காட்டிய ஆண்டவர்! புதிய தொகுப்பாளர் யார் தெரியுமா?

Published by
பால முருகன்

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்போவது என்றாலே அதனை பார்க்கும் குடும்ப ரசிங்கர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றோரு பக்கம் மீம்ஸ் கிரியேட் செய்பவர்களுக்கு கன்டென்ட் கிடைத்து விடும் என்றே சொல்லலாம். அதற்கு முக்கிய காரணமே நிகழ்ச்சிக்குள் நடக்கும் சர்ச்சை கலந்த காமெடியான சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு பிரபலமாக சர்ச்சைகள், காமெடியான விஷயங்கள், மீம்ஸ் வைரலாவது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றோரு பக்கம் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மேலும்  நிகழ்ச்சியை பிரபலப்படுத்த உதவியது. இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் 8 வது சீசனை தொகுத்து வழங்கவில்லை தற்காலிகமாக விலகி கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டார்.

ஆண்டவர் இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்க போகிறது ? அவருக்கு பதில் எந்த பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்? இப்படியான பல கேள்விகள் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து எழும்ப தொடங்கியது. இதனையடுத்து, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியானது.

நயன்தாரா பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி மட்டும் தான். ஏனென்றால், நயன்தாரா இப்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். எனவே, இந்த சூழலில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நிச்யமாக வாய்ப்புகள் இல்லை என்று சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் ஒரு புறம் ஓடிக்கொண்டு இருக்க மற்றோரு பக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்பு ஏற்கனவே, பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். எனவே அவருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இருப்பதால் அவரை பிக் பஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைக்க விஜய் தொலைக்காட்சி திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சிம்பு தன்னுடைய படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் சற்று திணறி வருவதாக ஏற்கனவே ஒரு தகவல் பேசப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்பது விஜய் டிவி அறிவித்தால் மட்டுமே தெரியவரும்.

Published by
பால முருகன்

Recent Posts

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

33 minutes ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

2 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

3 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

6 hours ago

பிரதமர் மோடி போராளி…பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பார்” நடிகர் ரஜினிகாந்த்!

மும்பை :  கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…

6 hours ago