தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!
பயங்கரவாதிகளை மோடி அரசு தப்ப விடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று. இந்திய அரசு இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டிய நிலையில், பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தியாவின் பதிலடி நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுத்தது வருகிறது.
இப்படியான பரபரப்பான சூழலில் இது குறித்து அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் இது குறித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள் என மிகவும் காட்டத்துடன் பேசியுள்ளார். மே 1 அன்று, டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் ” தீவிரவாதிகள் கட்டாயம் வேட்டையாடப்படுவார்கள். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது. தீவிரவாதிகள் அனைவரையும் ஒழிக்கும் வரையில் எங்களது நடவடிக்கைகளை நிறுத்த மாட்டோம்.
பயங்கரவாதிகளை மோடி அரசு தப்பவிடாது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்படும். யாராவது ஒரு மறைமுக தாக்குதலை நடத்தி வெற்றி பெற்றதாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று தான் சொல்லணும். இந்த மாதிரியான கோலைதனமான தாக்குதலை நரேந்திர மோடி அரசு சும்மாக விடாது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராக பதிலளிக்க முயற்சிப்பது 1.4 பில்லியன் இந்தியர்கள் மட்டுமல்ல. உலகின் முக்கிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்கின்றன. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உலகின் முக்கிய நாடுகளும் உறுதியளித்துள்ளன. பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தொடரும்” எனவும் காட்டத்துடன் அமித்ஷா பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025