கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!
தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழா ஆக.15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில் இன்னும் சில பிரச்சினைகளால் முடியாமல் உள்ளது. 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்து. அதன்பிறகு, மீண்டும் நிதி திரட்டப்பட்டு கட்டிடத்திற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கிறது.
கடந்த மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகளை விஷால், கார்த்தி இருவரும் நேரில் பார்வையிட்டனர். மேலும், விநாயகர் கோவிலில் பூசை செய்து வழிபாடும் செய்தனர். இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷால் நடிகர் சங்க கட்டட திறப்பு விழா எப்போது என்பது குறித்தும் தனது திருமணம் குறித்தும் சில விஷயங்களை பேசிவிட்டு சென்றார். இது குறித்து பேசிய அவர் ” தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகள் 9பது வருடங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட கஷ்டங்களை தாண்டி கட்டப்பட்டு விட்டது. இன்னும் ஒரு 4 மாதங்களில் முடிந்துவிடும் என நான் நினைக்கிறேன்.
கட்டடத்திற்கான திறப்பு விழாவை வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம். முதலில் கட்டடதிறப்பு விழா நடைபெறும். அதன்பிறகு தான் என்னுடைய திருமண விழா நடைபெறும். கட்டட விழா நடந்து முடிந்தால் தான் என்னுடைய திருமணம் நடைபெறும் என தெரியாமல் வார்த்தையை விட்டுவிட்டேன். அதற்கு 9 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு வழியாக கட்டிடம் வந்துவிட்டது.
கட்டிடம் திறப்பு விழாவிற்கு அனைவரும் பட்டுபுடவையுடன், வேட்டி சட்டை அணிந்துகொண்டு வரவேண்டும். அனைவரையும் தனிப்பட்ட முறையில் நான் நிச்சயமாக அனைவரையும் அழைப்பேன். இப்போது கட்டப்பட்டுள்ள கட்டிடம் என்பது உங்களுக்கான கட்டிடம். இது நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் இல்லை…மொத்தமாக சினிமா உலகுக்காக கட்டப்பட்ட பெரிய கட்டிடம். எனவே, அனைவரும் வருகை தரவேண்டும். பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நின்று கொண்டு இருப்பேன்” எனவும் விஷால் தெரிவித்தார்.