பிளாக்பஸ்டர் ஹிட்…வசூலில் மாஸ் காட்டும் ‘கஸ்டடி’.!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள்.

அரவிந்த் சாமி,பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருபாதக கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சன ரீதியாக படம் வெற்றிபெற்றாலும் வசூல் ரீதியாகவும் படம் செம வசூலை ஈட்டி வருகிறது.

அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படம் 7.4 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.