#BREAKING: பெரும் சோகம்…பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.!!

Published by
பால முருகன்

தமிழ் நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71

தமிழ் சினிமாவில் நாயகன், குணச்சித்திர மற்றும் வில்லன் பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மேலும், ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்பாபு உயிரிழந்ததாக வதந்தி தகவல் பரவி வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினர் அவர் நலமுடன் உள்ளார் என்று விளக்கம் கொடுத்தனர்.

இதனையடுத்து அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  மறைந்த நடிகர் சரத்பாபு 1973 ஆம் ஆண்டு  தமிழ் சினிமாவில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து  1970,1980 களில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர். சரத்பாபு நடிகர்கள் சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த்,  ஆகியோருடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

43 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

3 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago