cannes film festival 2023 [File Image]
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்க உள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழா என்பது பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் மே மாதம் நடைபெறும். அதே போல, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 76வது பதிப்பு வரும் மே 16ம் தேதி முதல் 27 தேதி வரை நடைபெறவுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழா முதன் முதலில் 1946 இல் கலை துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக நடத்தப்பட்டது. இந்த 76-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்றத் தலைவராக ரூபன் ஆஸ்ட்லண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரான்சில் நடைபெறும் 2023ம் ஆண்டிற்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக நடிகை குஷ்பு பங்கேற்கவுள்ளார். இந்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அனைவருக்கும் வணக்கம், நான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நான் பிரான்சிற்கு வந்துள்ளேன். இந்த மதிப்பு மிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதிநிதியாக கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…