சென்னையில் ரயில் மோதி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னையில் ரயில் பாதையை கடக்கும் பொழுது, ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trainaccident

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. ரயில் மோதி இருவருமே சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியை சேர்ந்த மமுகமது நஃபூல், சபீர் அகமது என தெரிய வந்துள்ளது. பின்னர், தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்